Viral Video: கொஞ்சம் ஓவர் தான்.... பெரிய்ய்ய அலமாரியை ஸ்கூட்டியில் அசால்டாக எடுத்துச் செல்லும் நபர்
சமூக ஊடக உலகத்தில், ஆச்சரியங்களுக்கும், அதிர்ச்சிகளுக்கும் குறைவே இருக்காது. தகவல் களஞ்சியமாக விளங்கும் சமூக ஊடகம், நமக்கு நல்ல பொழுது போக்கு அம்சமாகவும் இருந்து வருகிறது. காணக் கிடைக்காத பல அரிய விஷயங்களை நாம் காணலாம். அந்த வகையில், உங்களை வியப்பில் ஆழ்த்தும், வீடியோ ஒன்று, இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் பகிரப்பட்டுள்ளது.
சமூக ஊடக உலகத்தில், ஆச்சரியங்களுக்கும், அதிர்ச்சிகளுக்கும் குறைவே இருக்காது. தகவல் களஞ்சியமாக விளங்கும் சமூக ஊடகம், நமக்கு நல்ல பொழுது போக்கு அம்சமாகவும் இருந்து வருகிறது. காணக் கிடைக்காத பல அரிய விஷயங்களை நாம் காணலாம். அந்த வகையில், உங்களை வியப்பில் ஆழ்த்தும், வீடியோ ஒன்று, இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் பகிரப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனம் அதிலும், ஸ்கூட்டி என்பது, இரண்டு பேர் செல்லக்கூடிய வாகனம். அதில் பொருளை வைத்துக்கொண்டு எடுத்துச் செல்வது என்பது சிறிது கடினமான காரியம் தான். அதிலும் அளவில் மிகப் பெரிய ஒன்றை எடுத்துச் செல்ல முடியுமா என்ன.... ஆனால், மிகப் பெரிய அலமாரி ஒன்றை, அநாயாசமாக, கூட்டியில் எடுத்துச் செல்லும் வீடியோ ஒன்று, மிகவும் வைரல் (Viral Video) ஆகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், இதனைக் கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதியலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அளவில் மிகப்பெரிய, நீள அகலம் அதிகம் உள்ள ஒரு பெரிய அலமாரி ஒன்றை, ஸ்கூட்டியில் எடுத்துச் சென்று, வேறு இடத்திற்கு மாற்றுவது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். மிகவும் லாவகமாக, ஸ்கூட்டியில் அவர் எடுத்துச் செல்லும் வீடியோ, பலரைக் கவர்ந்துள்ளது.
வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்
வீடியோவில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அந்த அலமாரி கீழே விழுந்து விடுமோ என்று தோன்றும். ஆனால் அந்த நபர் மிகச் சரியாக பேலன்ஸ் செய்து, சில கிலோமீட்டர்கள் தூரத்திற்கு அதை எடுத்துச் சென்றுள்ளார். வில் ஸ்மித் என்ற பெயர் கொண்ட இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Viral Video: பாசக்கார பய போலிருக்கு.... புறாவுக்காக வாயை கொடுத்த ‘பாரி’ வள்ளல்...!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ