Viral Video: ஒரு ஆண் தான் விரும்பும் பெண் கவர பல வகையில் முயற்சி எடுப்பார்கள். பல ஆண்டுகால தமிழ் சினிமாவின் வரலாற்றை எடுத்துப்பார்த்தால், ஒவ்வொரு கதாநாயகனும், கதாநாயகியை தன் காதல் வலையில் விழ வைக்க பல்வேறு சேட்டைகள் செய்வதை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். பார்த்த உடன் காதலில் இருந்து, திருமணம் நிச்சயமான பெண் வரை தங்கள் காதலை வெளிபடுத்துவதில் ஆண்கள் தயங்குவதில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், ஒரு பெண்ணை தன் காதல் வலையில் விழ வைக்க ஒரு ஆண் மேற்கொள்ளும் முயற்சி தற்போது வைரலாகி வருகிறது. நம்மில் பலர் பெண்களின் கவனத்தின் பெற இசையை வாசிப்பது, பாடுவது அல்லது நடனமாடுவது ஆகியவற்றை செய்வோம். இங்கு இவர் தனது மாயாஜால வித்தைகளை காட்டி ஒரு பெண்ணின் கவனத்தை ஈர்த்தார் எனலாம். 


மேலும் படிக்க | இப்படி ஒரு பாசமா? வியக்க வைக்கும் அழகான பாசக் காட்சி வீடியோ வைரல்


வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு ஆணும் பெண்ணும் ஒரு சோபாவில் அருகருகே அமர்ந்திருப்பது தெரிகிறது. அந்த ஆண் சீட்டுக்கட்டுகளை கையில் வைத்துள்ளார். அவர் சிட்டுக்கட்டுகளை கலைத்து, ஒரு சீட்டை அந்தப் பெண்ணிடம் காட்டி, அதை நியாபகத்தில் வைத்திருக்கும்படி கேட்டுக்கொள்கிறார். 



அவர் அந்த குறிப்பிட்ட அட்டையை தனது உள்ளங்கையின் பின்புறத்தில் தனது விரல்களுக்கு இடையில் வைத்து மறைத்துவிடுகிறார். பின்னர், அந்தப் பெண்ணிடம் அனைத்து சீட்டுக்களையும் மேலே தூக்கி எறியும்படி சொல்கிறார். அந்த பெண்ணும் சீட்டுகளை மேல ஏறியும்போது, அதில் கீழே விழும் சீட்டை அந்த ஆண் பிடிப்பது போல் நடிக்கிறார். மிகத் தந்திரமாக அந்தப் பெண்ணிடம் தனது உள்ளங்கையின் பின்புறத்தில் வைத்திருந்த சீட்டை காண்பிக்கிறார். அந்த பெண் மிகவும் ஆச்சரியப்படுகிறாள். இருவரும் மகிழ்ச்சியில் ஆழந்தனர். 


இது ஒரு சூப்பரான சீட்டுக்கட்டு வித்தையாக தெரிகிறது. அந்த ஆண் செய்ததை போன்றே, இந்த தந்திரத்தைப் பயன்படுத்தி நம் நண்பர்களையும் நெருங்கியவர்களையும் ஈர்க்க நம்மில் பலருக்கு ஒரு யோசனையைத் தருகிறது.


மேலும் படிக்க | செருப்பு திருடிச் செல்லும் பாம்பு: ஷாக்கான நெட்டிசன்கள் - வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ