வைரல் வீடியோ: விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் ஏராளமாக உள்ளன. விலங்குகளின் வீடியோக்களை யாருக்குத்தான் பிடிக்காது? அப்பாவித்தனமான, வேடிக்கையான மற்றும் முட்டாள்தனமான செயல்களைச் செய்யும் விலங்குகளின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்த்தால், நமது மனது லேசாகிறது. நமது இறுக்கங்கள் தளர்வடைகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுபோன்ற வீடியோக்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. மக்களை சிரிக்க வைக்கும் இதுபோன்ற ஒரு வீடியோவைதான் இந்த பதிவில் காணவுள்ளோம். மனிதர்களைப் போலவே துணி துவைக்கும் ஒரு குரங்கின் வீடியோ இணையத்தில் மக்களை சிரிக்க வைத்துக்கொண்டு இருக்கிறது. 


மனிதர்களை ஒத்த உருவ அமைப்பு கொண்டுள்ள குரங்குகள் (Monkey), பல முறை மனிதர்களைப் போன்ற செயல்களை செய்வதையும் நாம் கண்டுள்ளோம். அப்படிப்பட்ட ஒரு செயலை செய்யும் இந்த குரங்கின் வீடியோ நிச்சயம் உங்களை ஆச்சரியப் பட வைக்கும். 


ALSO READ: Bizarre! 2 சகோதரிகளை ஒரே மேடையில் திருமணம் செய்த மணமகனுக்கு மாமியார் வீட்டில் களி


இந்த வைரல் வீடியோவில் (Viral Video), ஒரு குரங்கு, துணி துவைப்பதில் கைதேர்ந்த ஒருவரைப் போல, துணி துவைப்பதைக் காண முடிகிறது. அதுவும் நம் நாட்டில் எப்படி அடித்து அடித்து துணி துவைப்பார்களோ, அதேபோல், இந்த குரங்கும் துணி துவைத்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. முதலில் துணியை அடித்துத் துவைக்கும் குரங்கு, பின்னர், அதை நீரில் அலசுகிறது. பிறகு ஒரு பிரஷ்ஷை எடுக்கும் குரங்கு அதனால் துணியை நன்றாக தேய்த்து அழுக்கை அகற்ற முயற்சிகிறது.


இணையத்தை (Internet) கலக்கிக்கொண்டிருக்கும் இந்த குரங்கின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோ வைரலாகிவிட்டது. இதுவரை இந்த வீடியோ 96,000 க்கும் மேற்பட்ட வியூஸ்களைப் பெற்றுள்ளது. இந்த வீடியோவை மக்கள் ரசித்து பார்த்து வருகிறார்கள். அதிரடியான கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகிறார்கள். எனினும், குரங்கு மூலம் இப்படிப்பட்ட வேலைகளை செய்ய வைப்பது, விலங்குகளை துஷ்பிரயோகம் செய்வது போன்றது என்று சிலர் கூறியுள்ளனர். இருப்பினும், மனிதர்கள் இந்த வகையில் துணி துவைப்பதை குரங்கு பார்த்திருக்கும் என்றும், இதனால், அப்படியே குரங்கும் செய்கிறது என்றும் என்றும் பலர் கருதுகிறார்கள். 


குரங்குகள் மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகளாகும். அவை மனிதர்களை கவனித்து பல மனித நடவடிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் கற்றுக்கொள்கின்றன.


ALSO READ: Viral Video: பாதுகாக்க வேண்டிய போலீஸாரே திருட்டில் ஈடுபட்ட சம்பவம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR