மும்பை: இந்தியா முழுதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்தால் பெரும் அவதியில் உள்ளது. பொது மக்களும் நிர்வாகமும் செய்வதறியாமல் தவித்துக்கொண்டு இருக்கின்றனர். இந்த தொற்றும், இதற்கான சிகிச்சையும், தடுப்பு நடவடிக்கைகளும் அனைவருக்குமே புதிது என்பதால், இந்த வேளையில் பல குளறுபடிகளும் குழப்பங்களும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், மகாராஷ்டிராவில், கொரோனா நோயால் (Coronavirus) பாதிக்கப்பட்ட ஒரு மூதாட்டி, இறந்ததாக கருதப்பட்டு, தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் எழுந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சகுந்தலா கெய்க்வாட். அவருக்கு 76 வயதாகிறது. சகுந்தலாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதியானது. தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு (Quarantine) வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், வயது முதிர்ந்த அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. அதனால், அவர் மே 10 ஆம் தேதி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைப் பெற எண்ணினார். சகுந்தலாவை அவரது உறவினர்கள் பரமதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும், அங்கு அவருக்கு சிகிச்சைக்கான (Corona Treatment) படுக்கை கிடைக்காததால் அவர் காரிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ALSO READ: ஆக்சிஜனுக்கு பதில் செக்ஸ் சலுகை: அனுபவத்தைப் பகிர்ந்த ட்விட்டர் பயனர், ஆன்லைனில் ஆவேசம்
காரில் காத்திருந்த வேளையில் மூதாட்டி சுயநினைவை இழந்தார். அவர் அசைவில்லாமல் இருந்ததைக் கண்ட அவரது குடும்பத்தினர் அவர் உயிரிழந்துவிட்டார் என முடிவு செய்தனர். இதைத் தொடர்நு அவரது இறுதிச்சடங்களுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மூதாட்டி நீண்ட நேரத்திற்கு எந்த அசைவும் இல்லாமல் இருந்ததால், யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. அவர் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு தகனம் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் துவங்கின.
சரியாக தகனம் செய்யப்படுவதற்கு முன்னதாக சகுந்தலா திடீரென எழுந்து அனைவரையும் ஆனந்த அதிர்ச்சியில் தள்ளினார். திடீரென்று யாரும் எதிர்பார்க்காத வகையில் மூதாட்டி அழுதுகொண்டே கண் விழித்தார். இதைக் கண்ட அனைவரும் ஒன்றும் புரியாமல் விழித்தனர். எனினும், உறவினர்களுக்கு மகிழ்ச்சியே ஏற்பட்டது.
உறவினர்கள் சகுந்தலாவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு சிகிச்சை துவங்கியது. சில நிமிடங்கள் கழித்து சகுந்தலாவுக்கு மயக்கம் தெளிந்திருந்தால் கூட அவரது நிலை என்னவாகியிருக்கும் என நினைத்தால், மனம் பதபதைக்கிறது. ஒரு பெரிய சவாலை மயக்கத்திலேயே சமாளித்த அந்த மூதாட்டி கொரோனாவையும் தோற்கடித்து மீண்டு வருவார் என்பதி சந்தேகமில்லை.
ALSO READ: Corona Update: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 326,098 பேருக்கு கொரோனா உறுதி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR