வாழ்வதற்கு ஆசைப்படும் உலகத்தில், தனது இறப்பைக் கொண்டாட வேண்டும் என்று விரும்பும் மூதாட்டின் 3 கட்டளைகள் அனைவரையும் ஈர்க்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மரணம் என்ற ஒன்றே மாறாதது என்பதை நன்கு உணர்ந்த இந்த மூதாட்டி, தனது இறுதிச் சடங்கில் செய்ய வேண்டிய மூன்று அன்புக் கட்டளையை வீடியோ மூலம் தெரிவித்து வைரலாகிறார்.


அமெரிக்காவின் கனெக்டிகட்டில் வசிக்கிறார். 92 வயதான பாட்டி லில்லியன் ட்ரோனியாக், தனது இறுதி விருப்பத்தை சொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 


 என் மரணத்தை மது அருந்தி கொண்டாடுங்கள் என்று கோரும் 92 வயது மூதாட்டியின் இறுதியான இறுதிச் சடங்கு விருப்பம் டிக்டாக் உட்பட பல சமூக ஊடகங்களில் வைரலாகிறது. 


மேலும் படிக்க | நாகப்பாம்பை உயிருடன் விழுங்கும் ராட்சஸ பாம்பு;


TikTok இல் பிரபலமான பாட்டி
டிக்டாக்கில் 3.8 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் மிகவும் பிரபலமான பாட்டிகளில் ஒருவர் லிலியன் ட்ரோனிக். தற்போது, ​​அவர் பூரண ஆரோக்கியத்துடன் நலமாக இருக்கிறார், ஆனால் அவரது இறுதிச் சடங்கு குறித்து சில விருப்பங்களை அவர் தெரிவித்துள்ளார்.


தனது மரணம் தொடர்பாக மூன்று விதிமுறைகளை குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லியிருக்கிறார். அதையும் டிக்டாக் பாட்டி, ஊடகத்திலேயே பதிவேற்றி வெளியிட்டுள்ளார். அது வைரலாகிறது.


அவற்றை அவரது இறுதிச் சடங்கிற்கான இறுதி விருப்பங்கள் என்றும் சொல்லலாம். அந்த வீடியோ (Viral Video) இதுதான்...


 



 


அந்த 3 இறுதிச்சடங்கு விதிகள் 


டெய்லி மெயிலில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, லில்லியன் தனது மரணத்திற்காக அனைவரும் சோகப்படலாம், அழுகலாம். ஆனால் அழுவது முட்டாள்தனமாகத் தோன்றும் அளவுக்கு அழக்கூடாது, அழுகைக்கும் அளவுண்டு என்பதை புரிந்துக் கொண்டால் அழுகைக்கும் அர்த்தமுண்டு என்று நினைக்கிறார் இந்த பாட்டி.


இரண்டாவது விதியாக, பெர்த்தா என்ற பெண்ணின் பெயரைச் சொல்லி, தனது இறுதிச் சடங்கிற்கு அழைக்கக் கூடாது எனவும் கூறியுள்ளார். இந்த விஷயத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருக்கும் நெட்டிசன்கள், பெர்த்தா யார்? லில்லியனுக்கு அவர் மீது ஏன் கோபம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.


தனது கோபத்தை விரைவில் பகிர்ந்துக் கொள்வதாகவும் பாட்டி சொல்லியிருக்கிறார்.


மேலும் படிக்க | சாலையை ஹாய்யாக கடந்து சென்ற மலைப்பாம்பு


மூன்றாவது விதி தான் மரணத்தைக் கொண்டாடும் விதியாக அனைவருக்கும் தோன்றுகிறது. தனது இறுதிச் சடங்கில் கலந்துக் கொள்ளும் அனைவரும் மது பானத்தை கண்டிப்பாக குடிக்க வேண்டும், ஒரு பெக் குடிப்பது அவசியம். அதன் பிறகு அவர்கள் எவ்வளவு மது அருந்தினாலும் அது அவர்கள் விருப்பம் என்று மரணத்திற்கான சடங்கு விதிகளை வகுத்த பாட்டியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.


லிலியம் தனது பேரனுடன் இணைந்து பத்து ஆண்டுகளாக யூடியூப்பில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். பேஷன், அழகு குறிப்புகள், டேட்டிங் குறிப்புகள் தொடர்பான விஷயங்களை தனது பதிவுகளில் பகிர்ந்து வருகிறர் லில்லியம். 


இறுதி சடங்கில் மது விருந்து கொடுக்கும் பாட்டி என்று பலரும் பாட்டிக்கு பாராட்டு பத்திரம் படிக்கிறார்கள். 


மேலும் படிக்க | மானை இறுக்கும் மலைப்பாம்பு; சிக்கித் தவிக்கும் மான்... ஆனால்... நடந்தது என்ன..!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR