IPL 2022 Kiss Cam: இது முத்தப்போட்டி இல்லம்மா! ஐபில் போட்டி...

ஐபிஎல் போட்டி நேரலையில்போது முத்தமிடும் ஜோடியின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகியது, ஐபிஎல்லிலும் 'கிஸ் கேமை' அறிமுகப்படுத்துவதற்கான நேரமா இது என்று சில ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 3, 2022, 11:43 PM IST
  • புனே மைதானத்தில் முத்த ஜோடிகள்
  • இது ஐபில் மைதானத்தில் இருந்து நேரலை முத்தக் காட்சி
  • கூகுள் டிரெண்டாகும் ஐபில் முத்த காட்சி
IPL 2022 Kiss Cam: இது முத்தப்போட்டி இல்லம்மா! ஐபில் போட்டி... title=

ஐபிஎல் போட்டி நேரலையில்போது முத்தமிடும் ஜோடியின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகியது, ஐபிஎல்லிலும் 'கிஸ் கேமை' அறிமுகப்படுத்துவதற்கான நேரமா இது என்று சில ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர்.

IPL 2022 நடந்து கொண்டிருக்கிறது, வீரர்கள் மற்றும் அணிகளைத் தவிர, மைதானத்திலும், விளையாட்டு வீரர்கள் தொடர்பாகவும்  தனித்துவமான மற்றும் வேடிக்கையான காட்சிகளைப் படம்பிடித்து ரசிகர்களை மகிழ்விப்பது கேமரா ஆபரேட்டர்கள்தான்.

சனிக்கிழமை (2022, ஏப்ரல் 2), புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான ஐபிஎல் 2022 போட்டியின் போது, ​​ஒரு ஜோடி ஸ்டாண்டில் முத்தமிடுவதை கேமரா ஒன்று படம்பிடித்தது.

மேலும் படிக்க | பட்லரின் அதிரடியில் வீழ்ந்த மும்பை - தொடர்ச்சியாக 2வது தோல்வி

அந்த முத்தமிடும் இளம் ஜோடியின் புகைப்படம் சிறிது நேரத்தில் வைரலாகியது...

 

 

 

இந்தப் போட்டியில், ஷுப்மான் கில் (46 பந்தில் 84) மற்றும் லாக்கி பெர்குசனின் (4/24) அருமையான பந்துவீச்சினால் குஜராத் டைட்டன்ஸ் 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை தோற்கடித்தது.  

மேலும் படிக்க | 7வது முறையாக உலக கோப்பையை முத்தமிட்ட ஆஸ்திரேலியா

ஷுப்மான் அதிரடியாக விளையாடி குஜராத் டைட்டன்ஸ் அணியை 20 ஓவர்களில் 171-6 ரன்கள் என்ற நிலைக்கு கொண்டு சென்றார். அவருடைய அதிகபட்ச டி20 ஸ்கோரும் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கேப்டன் ஹர்திக் பாண்டியா (27 பந்துகளில் 31) மற்றும் டேவிட் மில்லர் (15 ரன்களில் 20 ரன்) இருவரின் ஸ்கோரும் அணிக்கு தெம்பு கொடுத்தது.\

டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக முஸ்தாபிசுர் ரஹ்மான் (3/23) அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, கலீல் அகமது (2/34), குல்தீப் யாதவ் (1/32) ஆகியோரும் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பெர்குசன் (4/24) தனது சுத்த வேகத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்டிங் வரிசையை திணறடித்தார். அவரைத் தவிர, முகமது ஷமியும் (2/30) குஜராத்துக்கு தேவையான விக்கெட்டுகளை சரியான சமயத்தில் எடுத்தார். கேப்டன் ரிஷப் பண்ட் (43) அவர்களின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தார்.

மேலும் படிக்க | கேப்டன்சியில் தோனி தலையிடுவதாக ஜடேஜா புகார்: CSKவுக்குள் புது பூகம்பம்?!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News