பொதுவாக இடர்பாடுகளில் சிக்கியவர்களை மீட்டெடுக்க மீட்பு படையினர் சுறுசுறுப்பாக செயல்படுவது வழக்கமான ஒன்று.  அதிலும் குறிப்பாக முதலில் மனிதர்களை மீட்கும் எண்ணம் தான் பலரிடம் இருக்கும், வாயில்லா ஜீவன்களான விலங்குகளை காப்பாற்றும் பலருக்கும் எளிதில் தோன்றிவிடாது.  ஆனால் விலங்குகளை காப்பாற்றுவது தான் முக்கியமானது, ஏனெனில் மனிதர்கள் கூட தாமாகவே முயன்று தப்பித்துவிட கூடும், ஆனால் விலங்குகள் அப்படி கிடையாது.  தற்போது வைரலாகும் ஒரு வீடியோவில் உயிருக்கு போராடும் நாயை அதிகாரிகள் மீட்கின்றனர், அதிகாரிகளின் இந்த செயலை பாராட்டி நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Viral: இதுதான் என்னோட கடைசி ட்ரிப்; உணர்ச்சிவசப்பட்ட விமானப்பெண் 


'லவ் பவர்' என்கிற ட்விட்டர் கணக்கில் இந்த வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில், படர்ந்திருக்கும் பனிப்பாறை சற்று உடைந்துள்ளது, அதனுள் கருப்பு நிற நாய் ஒன்று சிக்கி உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறது.  அப்போது பாதுகாப்பு உடைகள் அணிந்துகொண்டு மீட்பு படையினர் படகு ஒன்றின் மூலம் அந்த இடத்திற்கு விரைந்து வருகின்றனர், அதில் ஒரு அதிகாரி நாயை வேகமாக பிடித்து இழுத்து தூக்கி படகுக்குள் போடுகிறார்.  பின்னர் அவர்கள் நாய்க்கு சில முதலுதவிகளை அளிக்கின்றனர்.  ஏற்கனவே இதுபோன்று வெள்ள நீரில் அடித்து இழுத்து வரப்பட்ட நாயை இயந்திரத்தின் உதவியுடன் ஒருவர் மீட்டெடுத்த காட்சி இணையத்தில் பாராட்டை பெற்ற நிலையில், தற்போது இந்த சம்பவம் அதிக பாராட்டை பெற்றுள்ளது.


 



இந்த வீடியோவிற்கு இதுவரை பன்னிரெண்டாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளது.  இவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள் என்று பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.  அதிகாரிகளின் இந்த அசாத்திய செயலை பாராட்டி நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.


மேலும் படிக்க | இக்னோர் செஞ்ச மணமகன், வெச்சி செஞ்ச மணமகள்: வீடியோ வைரல் 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR