வைரல் வீடியோ: சமூக ஊடகங்கள் மூலம் வேட்டையாடும் கழுகைப் பார்த்திருப்பீர்கள். உயரமான வானத்தில் இருந்து கீழே கிலோமீட்டர் தொலைவில் தரையில் இரையைத் தெளிவாகக் கண்டு தாக்கக் கூடிய பறவை இது. கழுகுகள் அடிக்கடி கடலில் இருந்து கூட மீன்களை வேட்டையாடும் வீடியோக்களை இணையத்தில் பார்த்திருப்பீர்கள். பாம்புகளை வேட்டையாடும் திறனும் இதற்கு உண்டு. தற்போது அப்படிப்படி பட்ட  திறன் கொண்ட ஒரு பறவையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இந்த பறவை நாகப்பாம்பு போன்ற விஷ பாம்புகளை எளிதில் வேட்டையாடுவதாகவும் கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது வெளிவந்துள்ள காணொளியில், தரையில் ஊர்ந்து செல்லும் ஆபத்தான பச்சை பாம்பை இந்த பறவை சாதுர்யமாக தாக்கும் அதிர்ச்சி காட்சியை காணலாம். முதலில் பாம்பு அதனை குறிவைத்தாலும், பறவை எளிதாக அதனை கட்டுப்படுத்துகிறது. தற்போது வைரலாகி வரும் வீடியோவில், கோபமான பாம்பு பறவையின் முகத்தில் குத்தப் போகிறது, பறவை அதனை கால்களால் ஆமுக்கி பிடிக்கிறது. 


வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:




பருந்தை போன்ற இந்த பறவை பாம்பை வேட்டையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கமான animals_powers என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதள ரசிகர்களை மிகவும்  ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது . வைரலான வீடியோ இதுவரை 294k பார்வைகளையும் 11.8k லைக்குகளையும் பெற்றுள்ளது.


மேலும் படிக்க | Viral Video: சிங்கத்திடம் தப்பி முதலையிடம் மாட்டிக் கொண்ட எருமை! வனத்தில் ஒரு உயிர் போராட்டம்!


மேலும் படிக்க | Viral Video: சிறுத்தையிடம் சிக்கி சின்னாபின்னமான பாம்பு... மனம் பதற வைக்கும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ