அன்றாடம் இணையத்தில் பரவும் பல காட்சியும் ரசிக்கும்படியாகவும், ஆச்சர்யப்படும் படியாகவும் அமைந்துள்ளது.  இணையம் பலவிதமான வினோதங்களால் நிறைந்துள்ளது, இவை பலரின் மனதிற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.  அதிலும் சமீபகாலமாகவே பூனைகளின் குறும்புத்தனமான செயல்கள் அதிகமாக இணையத்தில் பரவி பலரையும் ரசிக்க செய்துள்ளது.  சில நாட்களுக்கு முன்னர் எலியை கண்டு பூனை பயந்தது, மதுபான கடையிலிருந்து தள்ளாடியபடி பூனை நடந்து வரும் காட்சி, ஸ்பைடர்மேன் போல சுவரில் நடக்கும் காட்சி போன்றவை இணையவாசிகள் பலரையும் ஈர்த்தது.  அந்த வரிசையில் தற்போது இரண்டு பூனைகள் பாசத்துடன் ஒன்றுக்கொன்று உணவை பரிமாறிக்கொள்ளும் காட்சி இணையத்தில் இதயங்களை களவாடியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கடற்கரையோரம் இறங்கிய இடி - மிரள வைக்கும் நேரடிக் காட்சிகள் 


இந்த வைரல் வீடியோவானது, ட்விட்டரில் அமேஸிங் நேச்சர் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.  அதில் வீட்டில் வளர்க்கக்கூடிய இரண்டு கருப்பு மற்றும் சாம்பல் நிறம் கலந்த பூனைகள் எதிரெதிரே அமைந்திருப்பதை காணலாம்.  அவற்றிற்கு ஒரு பவுலில் உணவு வைக்கப்பட்டுள்ளது, அதில் இருக்கும் உணவை ஒரு பூனை உண்ணுகிறது, பின்னர் அந்த பூனை எதிரே உள்ள மற்றொரு பூனையிடம் அந்த உணவு இருக்கும் பவுலை தள்ளுகிறது.  இவ்வாறாக அந்த இரண்டு பூனைகளும் ஒன்றுக்கொன்று கொஞ்சம் கொஞ்சமாக உணவை பகிர்ந்து உண்ணுகிறது.


 



இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து ரசித்து இக்கின்றனர்.  இந்த வீடியோவுடன் கேரிங்க் & லவ்விங் நேச்சர் என்கிற கேப்ஷனும் பதிவிடப்பட்டுள்ளது.  மனிதர்களே இதுபோன்று பகிர்ந்துண்ணும் பழக்கத்தை மறந்துவரும் நிலையில், இந்த பூனைகளின் செயல் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.  பூனையின் செயலை பாராட்டி பலரும் இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.


மேலும் படிக்க | மாஸ் காட்டிய முதியவர், பாகுபலி ஸ்டைலில் யானை ஏற்றம்: வைரலான வீடியோ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR