உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பு மூன்று வாரங்களுக்கும் மேலாக தொடர்கிறது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள். எனினும், பலர் இன்னும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு வயதான தம்பதியின் வீட்டிற்குள் ரஷ்ய ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஜோடி அச்சமின்றி ஆயுதம் ஏந்திய வீரர்களுக்கு எதிராக நின்றனர். இவர்களின் இந்த துணிச்சலுக்காக கியேவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாராட்டையும் இவர்கள் பெற்றனர். 


"இன்று நாங்கள் மூன்று ரஷ்ய வீரர்களை எதிர்த்து நின்ற இந்த வயதான தம்பதியினருக்கு வணக்கம் செலுத்துகிறோம். #Ukrainian Heroes" என்று தூதரகம் பாராட்டியுள்ளது.


இந்த வயதான தம்பதியரின் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளில் ஆயுதம் ஏந்திய மூன்று ரஷ்ய வீரர்கள், வீட்டின் நுழைவாயிலின் முன்புறம் வந்து வலுக்கட்டாயமாக உள்ளே நுழைவதை காண முடிகின்றது. பின்புறத்தில் நாய்கள் குரைக்க, ரஷ்ய வீரர்கள், ஆயுதம் ஏந்தி வலுக்கட்டாயமாக கதவுகளை திறக்கிறார்கள். 


வீடியோவில் பல குரல்களை கேட்க முடிகின்றது. அதைத் தொடர்ந்து பலத்த துப்பாக்கிச் சூடு சத்தமும் கேட்கிறது. பின்னர், வயதான அந்த ஜோடியின் வீட்டில் நடந்ததை வீடியோவில் பார்க்க முடிகின்றது. நீல நிற ஸ்வெட்டர் மற்றும் கருப்பு பேன்ட் அணிந்த ஒரு முதியவரும் இளஞ்சிவப்பு தொப்பி மற்றும் நீல நிற கோட் அணிந்த ஒரு பெண்மணியும் வெளியே வந்து ரஷ்ய வீரர்களை எதிர்கொள்கிறார்கள். 


இருவரும் ரஷ்ய வீரர்களைப் பார்த்து கத்துகிறார்கள். வீர்ரகளுக்கும் வயதான ஜோடிக்கும் இடையிலான வாக்குவாதம் அதிகரிக்கிறது. ஒரு ரஷ்ய வீர்ர துப்பாக்கி கொண்டு வானத்தை நோக்கி சுடுகிறார். நான்காவது ரஷ்ய வீரர் ஒருவர் வந்து அவர்களை வெளியேறச் சொல்கிறார். வயதான ஜோடி தொடர்ந்து அவர்களை நோக்கி கூச்சலிட்டு கத்துகிறார்கள். இறுதியாக ரஷ்ய வீரர்கள் வெளியேறுகிறார்கள். பின்னர் வயதான அந்த ஜோடி தங்கள் வீட்டு கதவை வேகமாக மூடுகிறார்கள். 


மேலும் படிக்க | Ukraine Russia War: தண்ணீர் ஊற்றி வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் உக்ரைன் வீடியோ! சும்மா அதிருதில்ல!! 


வயதான தம்பதியின் உறுதியை காண்பிக்கும் இந்த வீடியோவுக்கு இதுவரை 168 ஆயிரம் வியூஸ்களும் 7,200 லைக்குகளும் கிடைத்துள்ளன.


மாஸ் காட்டிய அந்த உக்ரைன் ஜோடியின் வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு: 



மேலும் படிக்க| 'வேணாம்..விட்டுடுங்க...ப்ளீஸ்': வடிவேலு ஸ்டைலில் கெஞ்சிய சிங்கம், வைரல் வீடியோ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR