சிங்கத்தை பந்தாடிய காட்டெருமை - வைரல் வீடியோ

தனியாக இருக்கும் காட்டெருமையை சீண்டிய சிங்கத்தை, மறைந்திருந்த மற்றொரு காட்டெருமை பந்தாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 1, 2023, 10:38 PM IST
சிங்கத்தை பந்தாடிய காட்டெருமை - வைரல் வீடியோ title=

காட்டின் ராஜாவான சிங்கம், எவ்வளவு பெரிய விலங்கையும் அசால்டாக வேட்டையாடிவிடும். உருவத்தில் பெரியதோ? சிறியதோ? தனக்கு வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் நேரடியாக அட்டாக் தான். ஆனால், அப்பேர்பட்ட சிங்கத்துக்கு விழும் அடியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?. ஒத்தையாக சென்று வேட்டையாடுவதில் கில்லாடியான சிங்கத்தை, காட்டெருமை ஒன்று லாவகமாக பந்தாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க | 'வேணாம்..விட்டுடுங்க...ப்ளீஸ்': வடிவேலு ஸ்டைலில் கெஞ்சிய சிங்கம், வைரல் வீடியோ

வனப்பகுதிக்குள் செல்லும் சாலையில் தனியாக ஒரு காட்டெருமை அமர்ந்திருக்கிறது. அப்போது அந்த வழியாக வரும் சிங்கம் ஒன்று  வேட்டை கிடைத்துவிட்டது என்றெண்ணி, அந்த காட்டெருமையை தாக்குகுறிது. ஆனால், அந்த சிங்கத்துக்கு தெரியவில்லை, அங்கு இன்னும் சில காட்டெருமைகள் இருக்கிறதென்று. சிங்கம் காட்டெருமையை கடித்து வேட்டையாட முற்படும்போது, அருகில் இருந்த மற்றொரு காட்டெருமை ஜெட் வேகத்தில் வருகிறது. காட்டெருமையின் வருகையை கவனிக்காத சிங்கம், வேட்டையாடுவதில் மட்டுமே குறியாக இருக்கிறது.

கணப்பொழுதில் வரும் காட்டெருமை, ஆபத்தில் சிக்கியிருக்கும் நண்பனை காப்பாற்றும்பொருட்டு, சிங்கத்தை தன்னுடைய கொம்பால் தூக்கி வீசுகிறது. சாதாரண வீச்சு அல்ல அது. மரண அடி சிங்கத்துக்கு. இரண்டு மூன்று முறை தலைகீழாக சுழன்று கீழே விழுகிறது சிங்கம். அடி வாங்கிய சிங்கம் அங்கு இருக்குமா என்ன?. விழுந்த அடியில் ஓடும் இடம் தெரியாமல் தெறித்து ஓடிவிடுகிறது. இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. டிவிட்டரில் மட்டும் சுமார் 200 ஆயிரம் பார்வைகளைக் கடந்துள்ளது.

மேலும் படிக்க | யார் பலசாலி.. வா மோதி பாத்திரலாம்.. சீசாவில் மோதிக்கொள்ளும் ஆடுகள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News