தோகை விரித்தாடும் வெள்ளை நிற மயில்.. மனதை பறிக்கும் வைரல் வீடியோ
Mesmerizing video goes viral: இந்த அற்புதமான பறவை அதன் தோகையை விரித்து ஆடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தோகை விரித்திருக்கும் மயிலின் வீடியோ: ஆண் மயில்கள் தனது தோகையை விரித்து நடனமாடுவதை நம்மில் பலர் பார்த்திருப்போம். நீங்கள் எப்போதாவது ஒரு வெள்ளை மயிலை தோகை விரித்து ஆடுவதை பார்த்திருக்கிறீர்களா? ஆம், நீங்கள் படித்தது சரி தான். அது ஒரு வெள்ளை மயில் தான். இந்த அற்புதமான பறவை அதன் தோகையை விரித்து அனைவரின் கணவத்தை ஈர்க்கும் ஆடுவதை நாம் வீடியோ காணலாம். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது. இந்த அழகான அற்புத காட்சியை பார்த்தால் நீங்களும் ஒரு கணம் மயக்கிப் போய்விடுகவீர்கள்.
வைரலான வீடியோவில், ஒரு வெள்ளை மயில் தனது துணையை ஈர்க்கும் முயற்சியில் தனது தோகையை விரித்து அழகாக நடனம் ஆடுகிறது. அழகான வெள்ளை இறகுகளுடன், அதன் நடனம் அனைவரின் மனதையும் ஈர்க்கும் அளவிற்கு இருக்கிறது.
மேலும் படிக்க | சிங்கத்துடன் விளயாடும் பச்சைக் குழந்தை! அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்
மயில் தோகை விரித்தாடும் அழகை எத்தனை நேரம் வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். மேகங்கள் திரண்டு, மழை வரும் போது மட்டுமே, மயில்கள் தோகையை விரித்து ஆடுவது வழக்கம். பறந்து விரிந்த அதன் அழகிய தோகைகளை பார்க்கும் போது, மனதில் கவிதை ஊற்றாக சுரக்கும்.
தேசியப் பறவையான மயில்களை பார்ப்பது இப்போதெல்லாம் அரிதாகிவிட்ட சூழலில், அவை தோகை விரித்தாடும் காட்சியை வீடியோக்களில் தான் பார்க்க முடிகிறது. அதிலும் வெள்ளை நிற மயில் மிகவும் அறிதான பறவையாக ஆகிவிட்டது. அதன்படி நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவை தோகைவிரித்தாடுவதை எப்போதாவது பார்க்கலாம்.
நிலைமை இப்படி இருக்க ஆண் மயில் ஒன்று தனது தோகையை விரித்து ஆடும் வீடியோ இணைத்தில் வைரவாகி வருகிறது. அந்த வீடியோவை இங்கே காணுங்கள்.
இந்த வீடியோ சுமார் 40 ஆயிரம் பார்வைகளை கடந்து, அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த ஆணழகை பார்த்து எந்த பெண் மயில் தான் மயங்காது என கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க | நடுரோட்டில் பைக்கில் சில்மிஷம்..காதல் ஜோடிகளின் வைரல் வீடியோ...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ