சிங்கத்துடன் விளயாடும் பச்சைக் குழந்தை! அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்

Baby Video Latest: பலவீனமான இதயம் இருந்தால் இந்த வீடியோவை பார்க்காதீர்கள். திகிலூட்டும் வீடியோ ஆனால் பார்த்து முடித்ததும் பரவசம் அளிக்கும் விளையாட்டு வீடியோ

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 8, 2023, 07:40 PM IST
  • சிங்கப் பெண் தெரியும்... ஆனால் சிங்கக்குழந்தை?
  • சிங்கத்துடன் விளையாடும் குழந்தை
  • பகீர் என பயம் அளிக்காத ஜாலி வீடியோ வைரல்
சிங்கத்துடன் விளயாடும் பச்சைக் குழந்தை! அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ள சமூக ஊடக உலகம் நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் நம்மிடம் கொண்டு வந்து சேர்கிறது. பல வீடியோக்களில் வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கின்றன. அவற்றில் சில சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் கலவையான அனுபவங்களை நமக்குக் கொடுக்கின்றன.

விலங்குகளின் வீடியோகள் சுவாரசியமானவையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சமூக ஊடகங்களில் பகிரபப்டும் அந்த வீடியோவில் சிங்கத்துடன் விளையாடும் கைக்குழந்தையின் வீடியோ ஆச்சரியம் அளிக்கிறது.  

வைரலாகும் விளையாட்டு வீடியோவை பார்க்கலாமா? 

குறுநடை போடும் குழந்தை ஒன்று, கண்ணாடித் தடுப்புக்கு பின் இருந்து விளையாடும் வீடியோ  ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் கொடுக்கிறது. அந்த குழந்தை, அச்சமில்லாமல் விளையாடுகிறது. ஒரு நொடி நமக்கு பயம் ஏற்பட்டாலும், அடுத்த நொடியே அந்த குழந்தை மனம் நமக்கும் தொற்றிக் கொள்கிறது.  

மேலும் படிக்க | Viral Video: நடுரோட்டில் இப்படியா..அடுத்து என்ன நடந்தது? அதிர்ச்சி வீடியோ 

குழந்தை பாதுகாப்பாக நின்றிருப்பது ஆசுவாசத்தை அளிக்கிறது. கண்ணாடி தடுப்புக்குள் இருக்கும் சிங்கக்குட்டி, குழந்தையைப் பார்த்ததும் விளையாடுவது, அதன் விளையாட்டு மனப்பான்மையை காட்டுகிறது.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்று சொல்வதைப் போல, சிங்கத்தைப் பற்றிய அச்சம் ஏதும் இல்லாத இந்தக் குழந்தை, மகிழ்ச்சியுடன் கை தட்டுவதையும், அதற்கு பதில் அளிக்கும் வகையில், கண்ணாடியில் சிங்கம் தட்டுவதையும் பார்க்க முடிகிறது.  

மேலும் படிக்க | Viral Video: மயிலை தாக்க முயன்ற புலி.. இறுதியில் யாரும் எதிர்பார்க்காத திருப்பம்

இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் பல வித கமெண்டுகளையும் அளிக்கத் தவறவில்லை.  

'வீடியோ எடுப்பதற்காக குழந்தையை இப்படி பழக்கலாமா?' என்ற கேள்விகளும் எழுகின்றன. ஆனால், குழந்தை பாதுகாப்பாக இருப்பதால், இது குழந்தையின் அச்சமற்ற தன்மையை காட்ட உதவுகிறது என பலரும் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | சிங்கக்கூட்டத்தில் சிக்கிய குரங்கு: மனதை பதபதைக்க வைக்கும் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News