பாலித்தீன் கவரில் மீன் சமைக்கும் மூதாட்டி... டேய் எப்புட்றா - வைரல் வீடியோ
மூதாட்டி ஒருவர் பாலித்தீன் கவரில் தண்ணீரை ஊற்றி, அதனை நெருப்பு மீது வைத்து மீன் சமைக்கும் மூதாட்டியின் வீடியோ வைரலாகியுள்ளது.
ஒவ்வொரு ஊரிலும் ஒரு உணவை வித்தியாசமாக சமைப்பார்கள். அவரவர் ஊரின் காலநிலைக்கு ஏற்ப உணவு முறைகள் இருக்கும். தென் இந்தியாவில் இருக்கும் உணவு முறை வட இந்தியாவில் இல்லை. இங்கு சமைகப்படும் உணவுகள், அங்கு வேறுவிதமாக சமைப்பார்கள். ஏன், ஒரே மாநிலத்திலேயே கூட உணவு முறைகள் வெவ்வேறு முறையாக சமைப்பது இருக்கிறது. நாடு விட்டு நாடு என்றால் சொல்லவா வேண்டும்? நிச்சயம் உணவு முறைகளும், அவை சமைக்கப்படும் விதமும் வித்தியாசமாக தான் இருக்கும். மீன் எல்லா இடத்திலும் கிடைக்கும். ஆனால் அது சமைக்கப்படும் முறை என்பது அந்தந்த இடத்தில் வசிக்கும் மக்களை பொறுத்தது.
மேலும் படிக்க | அதிசயம்..மனிதனை போலவே எழுந்து நிற்கும் கொடூரப் பாம்பு: வீடியோ வைரல்
இங்கே வைரலாகியிருக்கும் வீடியோவில் பாட்டி ஒருவர் பாலித்தீன் கவரிலேயே மீனை சமைக்கிறார். பொதுவாக பாலித்தீன் கவர் நெருப்பில் காண்ப்பித்தால் எரிந்துவிடும் என்பது தெரியும். ஆனால், அதற்குள் தண்ணீரை ஊற்றி மீனே சமைக்கலாம் என்பது இந்த பாட்டியின் வீடியோவை பார்த்த பிறகே தெரிகிறது. அந்த வீடியோவில் பாட்டி ஒருவர் நிலத்தில் நெருப்பு மூட்டியிருக்கிறார்.
பின்னர் பாலித்தீன் பை ஒன்றில் நீரை நிரப்பி, நெருப்பின் மீது அந்த கவரை தொங்க விடுகிறார். அதன்பின், மீன் சமைப்பதற்கு தேவையான அனைத்து மசாலா பொருட்களையும் அந்த கவருக்குள் போடும் அவர், கடைசியாக மீனையும் எடுத்து பாலித்தீன் கவருக்குள் போட்டு வேக வைக்கிறார். இத்தனை பொருட்களையும் தாங்கியிருக்கும் பாலித்தீன் கவர் உடைந்துவிடவில்லை. நெருப்பின் சூட்டிலும் உருகிவிட வில்லை. மீன் தண்ணீரில் கொதித்து சுவையான உணவாக மாறுகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் ’எப்புட்றா டேய்’ என தங்களின் வியப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
மேலும் படிக்க | தண்ணீருக்குள் டூயட் போடும் வாத்துகள்: ரசிக்க வைக்கும் வீடியோ
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ