ஜூம் செயலி வழியாக நடந்த நீதிமன்ற ஆன்லைன் வழக்கு விசாரணையின் போது, வீடியோவை அணைக்காமல், வழக்கறிஞர் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் வைரலாகி வருகிறது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகளாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் (Social Media) மூலம் நம்மிடம் வந்து சேர்கிறது. அந்தவகையில், ஜூம் செயலி வழியாக நடந்த நீதிமன்ற ஆன்லைன் வழக்கு விசாரணையின் போது, வீடியோவை அணைக்காமல், வக்கீல் ஒருவர் உடலுறவில் ஈடுபட்டட சம்பவம் பெரு (Peruvian) நாட்டில் நிகழ்ந்துள்ளது. 


கொரோனா பரவலுக்கு பின், வேலை, படிப்பு, மீட்டிங் என அனைத்தும் ஆன்லைன் வழியாக நடந்து வருகிறது. மிகவும் பயனுள்ள இந்த தொழில்நுட்பம், சிலரின் அஜாக்கிரதையால், பெரும் சர்ச்சையும் உருவாக்க தவறவில்லை. இப்படி பெரு நாட்டில் நடந்த ஒரு சம்பவம், சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டுக்கே பெரும் அவமானமாக மாறி உள்ளது. பெருவில், ஜூம் செயலி (Zoom App) வழியாக நடந்த நீதிமன்ற ஆன்லைன் வழக்கு விசாரணையில் தனது தரப்பு வாதம் முடிந்தததும், வக்கீல் லாஸ் டி சஞ்சாமயோ தனது வீடியோவை ஆப் செய்ய மறந்து விட்டார்.


ALSO READ | Viral: போலீஸ் ஸ்டேசனில் பார்ட்டி கொண்டாடிய சுற்றுலாப் பயணிகள்..!


பின் தனது அறையில், பெண் ஒருவருடன் உடலுறவு வைத்து கொண்டார். கேமராவை அணைக்காமல், அது விர்ச்சுவல் மீட்டிங் மற்றும் TV-யில் நேரலையாக ஒளிபரப்பானது. இதனால் நீதிபதி உள்ளிட்ட அனைவரும் கடும் அதிருப்தி அடைந்தவர். மொபைலில் தொடர்பு கொள்ள முயன்ற போதும், அவர் சைலன்டில் போட்டிருந்ததால், அவர் காலை எடுக்கவில்லை. இதனால் உடனடியாக, வழக்கு விசாரணையை நீதிபதி முடித்து கொண்டார். அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.


கோர்ட்டின் புனிதத்தையும், வக்கீல் தொழிலின் கண்ணியம் மற்றும் மரியாதையையும் சஞ்சாமயோ கெடுத்துவிட்டதாக நீதிபதி குற்றம்சாட்டி உள்ளார். அவருக்கு அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சஞ்சாமயோ மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு பார் கவுன்சிலும் அறிவித்துள்ளது. நாட்டிற்கே களங்கள் விளைவித்ததாக, பெரு அரசும் விசாரணையை துவக்கி உள்ளது. அவர் செக்ஸ் வைத்துக் கொண்ட பெண், அவரிடம் வழக்கு ஒன்றிற்காக வந்தவர் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR