Viral: போலீஸ் ஸ்டேசனில் பார்ட்டி கொண்டாடிய சுற்றுலாப் பயணிகள்..!

போலீஸ் ஸ்டேசனில் பார்ட்டி கொண்டாடி நடனடமாடிய சுற்றுலாப் பயணிகளின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது..!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 2, 2021, 01:46 PM IST
Viral: போலீஸ் ஸ்டேசனில் பார்ட்டி கொண்டாடிய சுற்றுலாப் பயணிகள்..! title=

போலீஸ் ஸ்டேசனில் பார்ட்டி கொண்டாடி நடனடமாடிய சுற்றுலாப் பயணிகளின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது..!

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகளாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் (Social Media) மூலம் நம்மிடம் வந்து சேர்கிறது. அந்தவகையில், போலீஸ் ஸ்டேசனில் பார்ட்டி கொண்டாடி நடனடமாடிய சுற்றுலாப் பயணிகளின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா தொற்று (Coronavirus) பாதிப்பு சர்வதேச நாடுகளையும் பெரும்பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பாதிப்பின் தீவிரத்தை பொறுத்து அந்தந்த நாடுகள் பொதுமுடக்கம், ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமல்படுத்தியவண்ணம் உள்ளன. கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாடு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, தாய்லாந்து நாட்டில், இரவு 9 மணிக்கு மேல், மதுபான பார்கள் (Liquor bars) அடைக்க அந்நாட்டு போலீசார் உத்தரவு பிறப்பித்திருந்தனர். இந்த உத்தரவு சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்டறிய போலீசார் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.

No description available.

ALSO READ | நிர்வாணமாக தெருக்களில் சுற்றித்திரியும் ஆண்; ஏன் தெரியுமா?

இந்த சோதனையில், இரவு 9 மணிக்கு மேல் இயங்கிய பாரின் உரிமையாளர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 89 பேர் பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்திருந்த நிலையில், அங்கும் அவர்கள் பாட்டும், நடனமுமாக இருந்துள்ளனர். இந்த வீடியோ, சமூகவலைதளதங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து, தாய்லாந்து போலீசார் தரப்பில் தெரிவித்து உள்ளதாவது, கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் என்பது அனைத்து இடங்களுக்கும் பொதுவானது. கொரோனா விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள், அங்கும் தனிமனித இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளை மீறியுள்ளனர். இவர்கள் மீது கடும் நடவடிககை எடுக்க இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News