இந்த உலகம் சேட்டைக்கார உலகம் தான். குசும்பு தனங்கள் எல்லாம் இடத்திலும் நிறைந்திருக்கிறது. அப்படி எல்லாம் ஏதும் இல்லையே? என நீங்கள் நினைத்தால் கொஞ்சம் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களைப் பாருங்கள். நீங்கள் கற்பனைகூட செய்து பார்த்திராத அளவுக்கான சம்பவங்கள் எல்லாம் ஆயிரக்கணக்கில் வீடியோவாக இருக்கின்றன. அதில் ஒன்று தான் ஒரு சேட்டைக்கார பையன் பைக்கில் சைக்கிள் ஓட்டுவதும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பாம்பிடம் சிக்கித் தவிக்கும் பல்லி... காக்க போராடும் துணை... வைரலாகும் வீடியோ


இந்திய அரசின் போக்குவரத்து விதிப்படி சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம். மீறி அவர்கள் வாகனம் ஓட்டி ஏதேனும் விபத்து ஏற்படுத்தினால் அந்த சிறுவர்களின் பெற்றோருக்கு தண்டனை உண்டு என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்த விழிப்புணர்வு எல்லாம் கிராம புறங்களை எட்டியதாக தெரியவில்லை. வாகனம் ஓட்டுவதைக் கூட பொழுதுபோக்காக நினைத்துக் கொண்டு அதனை தாறுமாறாக சாலையில் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் சிறுவர்கள். இந்த வீடியோவில் கூட ஒரு சின்ன பையன், அதுவும் பைக் உயரம்கூட இல்லை. பைக்கை ஸ்டார்ட் செய்து, ஓடிச் சென்று பைக்கில் ஏறுகிறார். அவரால் நின்று கொண்டு ஏற முடியாது. ஏனென்றால் கால்கள் எட்டாது. இது அவருக்கும் தெரிந்திருப்பதால், ஸ்மார்டாக யோசித்து பைக்கை இயக்குகிறார்.


சைக்கிளை பெடல் அடித்து ஓட்டியதுபோல் பைக்கையும் அப்படி இயக்குகிறார். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், அந்த சின்ன பையன் மட்டும் பைக்கில் செல்லவில்லை. ஏற்கனவே இன்னொரு சின்ன பையனையும் அந்த பைக்கில் உட்கார வைத்திருக்கிறார். பார்க்கும்போது இந்த வீடியோ காமெடியாக தான் இருக்கும். ஆனால், விபத்து ஏற்பட்டால் மட்டுமே அதன் விபரீதம் புரியும். இந்த மாதிரியான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் கிடைக்கும் லைக்குகளுக்காக எடுத்து பதிவிடப்பட்டால் கூட அது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும்.



இதனை காவல்துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது, எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் தெரியவில்லை. மேலும் வீடியோவில் பைக் நெம்பரும் தெரியவில்லை. இன்ஸ்டாகிராமில் மட்டும் மில்லியன் கணக்கான பார்வைகளையும், லைக்குகளையும் இந்த வீடியோ பெற்றிருக்கிறது.  


மேலும் படிக்க | Viral Video: 'கற்பூர புத்திப்பா உனக்கு...' இந்த க்யூட் பூனையின் செயலை பாருங்களேன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ