சாகசங்கள் செய்வதையே வாடிக்கையாக வைத்திருப்பவர்கள் உலகம் முழுவதும் பலர் இருக்கின்றனர். அவர்கள் தங்களின் சாகசதுக்காக செய்யும் வித்தியாசமான மற்றும் வேடிக்கை விஷயங்கள் பலரை ஈர்க்கவும், ஒரு சில நேரங்களில் பதைபதைக்கவும் வைக்கிறது. அப்படியான வீடியோ ஒன்றுதான் இப்போது இணையத்தில் வைரலாகியிருக்கிறது. அந்த வீடியோவில், பல்லாயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் இருந்து பெண் ஒருவர் இறங்கி உடற்பயிற்சி செய்கிறார். காண்போரை பதைபதைக்க வைக்கும் அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Viral Video: இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலை... கிரேனில் ஸ்கூட்டருடன் தொங்கும் நபர்!


வைரல் வீடியோவில் இடம்பெற்றுள்ள பெண்ணின் பெயர் வசெனினா. ஸ்கை டைவிங் செய்வதில் வல்லவரான அவர், அண்மையில் விமானம் ஒன்றில் ஸ்கை டைவிங் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது, பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவிலான அந்தரத்தில் இருந்தவாறு விமானத்தில் வெளியேறும் அவர், ஸ்கை டைவிங் செய்யாமல் விமானத்தை பிடித்துக் கொண்டு உடற்பயிற்சி செய்கிறார். வசெனினாவின் இந்த வீடியோ இப்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகியிருக்கிறது.   



இந்த வீடியோ ஆகஸ்ட் 1 ஆம் தேதி வாசெனினாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது. "ஏபிஎஸ் ஒர்க்அவுட் செய்வதற்கான ஒரே வழி. #abworkout #skydiving" என்று கேப்சனிட்டு இந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். ஸ்கைடைவிங்கிற்கு சில வினாடிகளுக்கு முன், அவர் செய்யும் வீடியோ நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


வெளியிடப்பட்டதிலிருந்து, வீடியோ 49 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளது. ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் அந்தப் பெண்ணின் பயமற்ற திறமையால் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் தன்னால் இதனை செய்ய முடியாது எனக் கூறியுள்ள அந்த நெட்டிசன், ஒருவேளை அப்படி செய்தால் எனக்கு மாரடைப்பு வந்துவிடும் எனத் தெரிவித்திருக்கிறார். கேட்டி வாசெனினா இன்ஸ்டாகிராமில் 1.39 லட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். மேலும் அவர் தனது சாகசங்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.


மேலும் படிக்க | உ.பியில் காவலர்கள் போட்ட நாகினி நடனம்; வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ