Instagram செல்வாக்கு பட்டியலில் 25வது இடம் விராட் கோலி, மனைவி அனுஷ்கா 24 வது இடத்தில்...
இன்ஸ்ட்ராகிராமில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் 25வது இடம் விராட் கோலிக்கு கிடைத்துள்ளது, அவரது மனைவி அனுஷ்கா பிரபலங்களின் பட்டியலில் 24 வது இடத்தை பிடித்திருக்கிறார்...
புதுடெல்லி: முதல் 25 உலகளாவிய இன்ஸ்டாகிராம் செல்வாக்கு பட்டியலில் இந்திய கேப்டன் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் அனுஷ்கா சர்மா 24 வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்திய கேப்டன் விராட் கோலியின் பெயர் சர்வதேச கிரிக்கெட்டில் பல இடங்களில் பதிவாகியிருக்கிறது. இந்த ஆண்டு கூடுதலாக மற்றுமொரு சாதனையை விராட் கோலி பதிவு செய்திருக்கிறர். விராட்டின் சாதனை என்றால், அனுஷ்கா மட்டும் சளைத்தவரா என்ன?
2008 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமானதில் இருந்து, பேட்ஸ்மேனாக பல மைல்கற்களை எட்டியுள்ளார் விராட் கோலி.(Virat Kohli) 2017 ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டார் விராட் கோஹ்லி. நவீன சகாப்தத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க கிரிக்கெட் வீரராக பார்க்கப்படும் இளைஞர்களில் விராட்டும் ஒருவர்.
Also Read | Google-லிடம் 2020-யில் இந்தியர்கள் கேட்ட Top 10 கேள்விகள் என்ன தெரியுமா?
அண்மையில், கோஹ்லி மற்றொரு பெரிய சாதனையை படைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆதிக்கம் செலுத்தும் செல்வாக்கு மிக்கவர்களின் பட்டியலில் முதல் 25 இடங்களுக்குள் விராட் வந்துவிட்டார். உலகளாவிய தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு தளமான ஹைப் ஆடிட்டர் (Hype Auditor) இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
பார்வையாளர்களின் தரம் மற்றும் விழிப்புணர்வு, அதிகாரமளித்தல், சமூக ஊடக மேடையில் குரல், கொடுப்பது, சக்தி மற்றும் தங்களின் எண்ணங்களின் வாயிலாக பலருக்கு உத்வேகம் அளிப்பது என்பதன் ஹைப் ஆடிட்டர் 1,000 இன்ஸ்டாகிராம் கணக்குகளை பட்டியலிட்டுள்ளது.
இந்த பட்டியலில் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) முதலிடத்தில் உள்ளார். 11 வது இடத்தில் இடம்பெறுகிறார் விராட் கோலி. மிகப் பெரிய இந்திய பிரபலங்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
Also Read | யோகா செய்யும் அனுஷ்கா, ஆதரவாய் அருகில் விராட்: viral ஆகி இதயங்களைக் கவர்ந்த pic!!
பிரதமர் மோடி 17 வது இடத்தைப் பிடித்துள்ளார். விராட் கோஹ்லியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா (Anushka Sharma) 24 வது இடத்தை பிடித்துள்ளார். அனுஷ்கா சமூக ஊடகங்களில் எப்போதும் அனைவராலும் விரும்பப்படுபவர். பாலிவுட் நடிகைகளில் அனுஷ்காவைத் தவிர கத்ரீனா கைஃப் 43வது இடம் மற்றும் தீபிகா படுகோன் 49 வது இடங்களைப் பிடித்தனர்.
விராட் கோலி-அனுஷ்கா தம்பதியினர் எப்போதும் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் தம்பதியினர். இருவருமே இன்ஸ்ட்ராகிராமின் பிரபலங்களின் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளனர்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR