யோகா செய்யும் அனுஷ்கா, ஆதரவாய் அருகில் விராட்: viral ஆகி இதயங்களைக் கவர்ந்த pic!!

அனுஷ்கா சர்மா தற்போது மும்பையில் இருக்கிறார். விராட் கோலி ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடரில் இருக்கிறார்.

Written by - ZEE Bureau | Last Updated : Dec 1, 2020, 01:54 PM IST
  • வைரல் ஆகும் அனுஷ்காவின் யோகா செய்யும் படம்.
  • கர்ப்ப காலத்தில் யோகா செய்வதில் மகிழ்ச்சி-அனுஷ்கா.
  • ரசிகர்களுக்கு பிடித்தமான ஜோடிகளில் அனுஷ்கா-விராட்டுக்கு தனி இடம் உள்ளது.
யோகா செய்யும் அனுஷ்கா, ஆதரவாய் அருகில் விராட்: viral ஆகி இதயங்களைக் கவர்ந்த pic!!

புதுடெல்லி: அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலி, ஒரு அழகான, க்யூட்டான் ஜோடியாக ரசிகர்களால் விரும்பப்படுபவர்கள். தங்களது வாழ்க்கையின் முக்கியமான தருணங்களின் புகைப்படங்களை தங்கள் சமூக ஊடக அகௌண்டில் அவ்வப்போது பகிரும் இந்த ஜோடி, ரசிகர்களுடன் ஒரு இணையற்ற இணைப்பை ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒரு க்யூட்டான ஜோடியாகும்.

இப்போதும், இவர்கள் ஒரு அற்புதமான படத்தை பகிர்ந்துள்ளார்கள். ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ள இந்த படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தை அனுஷ்கா ஷர்மா (Anushka Sharma) பகிர்ந்துள்ளார். அனுஷ்கா தற்போது கர்ப்பமாக உள்ளார். கணவர் விராட் கோலியின் ஆதரவுடன் ஒரு யோகா ஆசனம் செய்யும் படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

"இந்த உடற்பயிற்சி 'கைகளை கீழே வைத்து கால்களை மேலே தூக்குவது' மிகவும் கடினமான ஒன்று. நான் எப்போதுமே யோகா (Yoga) செய்வது பழக்கம். எனது கர்ப்ப காலத்திலும், அதிக வளைவுகள் மற்றும் முன் பக்கம் அதிகம் குனியாமல், மற்ற அனைத்து யோகாசனங்களையும் நான் முன் போல் செய்யலாம் என மருத்துவர் குறினார். ஆனால், இதற்கு தகுந்த ஆதரவு இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். நான் சிரசானத்தை பல ஆண்டுகளாக செய்து வருகிறேன். சுவர் எனக்கு அளிக்கும் ஆதரவோடு இதற்கு இப்போது என் கணவரின் ஆதரவும் இருந்தால் நன்றாக இருக்கும் என எனக்குத் தோன்றியது. இதுவும் என யோகா ஆசிரியர் @eefa_shrof இன் மேற்பார்வையின் கீழ் செய்யப்பட்டது. அவர் இந்த அமர்வின் போது என்னுடன் இருந்தார். எனது கர்ப்ப காலத்திலும் என் யோகா பயிற்சியைத் தொடர்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று அனுஷ்கா இந்த இடுகையில் எழுதியுள்ளார்.

ALSO READ: அன்புக்கு அப்பா, ஆட்டத்துக்கு விராட் கோலி என்று கூறுகிறாராம் இந்த cricketer-ன் மகன்

அனுஷ்காவின் இடுகை உங்கள் பார்வைக்கு:

அனுஷ்கா சர்மா தற்போது மும்பையில் இருக்கிறார். விராட் கோலி (Viral Kohli) ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடரில் இருக்கிறார். IPL 2020 நடந்தபோது இந்த ஜோடியை UAE-ல் ஒன்றாகக் காண முடிந்தது.

ஆகஸ்டில், அனுஷ்கா மற்றும் விராட் ஆகியோர் தாங்கள் பெற்றோர் ஆகப்போவதை அறிவித்தனர். இந்த நட்சத்திர தம்பதிக்கு ஜனவரி 2021 இல் குழந்தை பிறக்கும் என கூறப்பட்டுள்ளது.

அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோஹ்லிக்கு திருமணமாகி 2020 டிசம்பரில் மூன்று வருடங்கள் நிறைவடைகின்றன. 

ALSO READ: ‘நீங்கள் அற்புதமான பெற்றோர்களாக இருப்பீர்கள்’- Virat, Anushka-வை வாழ்த்திய PM Modi!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News