கொரோனாவுக்கு முக்கியமான மருந்தே நாம் பயப்படாமல் இருப்பது தான் என்று நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகம் முழுவதும் தீவிரமாக பரவிவரும் கொரோனா தொற்று மக்களை பெரும் பீதியில் ஆழ்தியுள்ளது. இந்நிலையில், நடிகர் விஷால் மற்றும் அவரது தந்தை, அவரின் மேலாளர் ஆகியோருக்கு கடந்த 20 தினங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் அவர், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டார். நடிகர் விஷால் கொரோனா அனுபவம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 


அதில், ‘எனது அப்பா ஜி.கே.ரெட்டிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நான், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. அவரை வீட்டில் வைத்தே சிகிச்சை அளித்தோம். அவருக்கு உதவி செய்ததால், எனக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து என்னுடைய மேலாளர் ஹரிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நாங்கள் ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவம் எடுத்து ஒரு வாரத்தில் நாங்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்தோம்.


ALSO READ | கணவர் இறந்த வருத்தம் இல்லாமல்.. நிர்வாணமாக புகைப்படத்தை வெளியிட்ட நடிகை!!


நான், ஆயுர்வேதிக் மருத்துவத்துக்கு விளம்பரம் செய்வதற்காக இதனை சொல்லவில்லை. உண்மையிலேயே அது பலனளித்தது. கொரோனா வந்தாலும் பயப்படக் கூடாது. எங்க அப்பாவுக்கு 82 வயது. அவர் பயப்படாமல் இருந்தார். அந்த மாத்திரை தான் என்னையும் அவரையும் இருந்தது தான் அவரை கொரோனாவிலிருந்து மீட்டது. 



எங்களால் யாருக்குமே பாதிப்பு இல்லாமல், இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டோம். இந்த வீடியோ எந்தவொரு மருத்துவருக்கோ, மருத்துவத்துக்காகவோ பகிரவில்லை. யாருக்கும் எதிர்ப்பும் தெரிவிக்க இந்த வீடியோவை வெளியிடவில்லை. இன்னொரு மனிதனுக்கு மனிதனாகச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் சொல்கிறேன்" என அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.