புற்றுநோயால் இறந்த தனது பாகனுக்கு உணர்ச்சிபூர்வமாக விடை கொடுத்து அனுப்புகிறது பாசம் மிகுந்த யானை. இந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் கண் கலங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவின் கொல்லத்தில் நடைபெற்ற மனதை உருக்கும் சம்பவம் இது. பல்லத் பிரம்மதாதன் (Pallat Brahmadathan) என்ற யானையின் அன்பு கண்ணீராய் வெளிப்பட்டது. புற்றுநோயால் காலமான தனது பாகனுக்கு இறுதி விடை கொடுக்கும் ஒரு யானையின் அன்பை வெளிப்படுத்திய நிகழ்வு அனைவரையும் நெகிழச் செய்தது.


மனிதர்களைப் போலவே, விலங்குகளும் பலவிதமான உணர்ச்சிகளை உணர்கின்றன, அதை வெளிப்படுத்தவும் செய்கின்றன. விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான பிணைப்பை சித்தரிக்கும் இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே இன்றும் நடப்பதை பார்த்தால், அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ் என்ற முதுமொழி நினைவுக்கு வருகிறது. இதயத்தை இலக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, மனதை நெகிழச் செய்கிறது. 



கேரளாவின் கொல்லத்தில் இந்த சம்பவம் நடந்தது, பல்லத் பிரம்மதாதன் என்ற யானையை சுமார் 25 ஆண்டுகளாக பராமரித்து வந்த ஓமனசேட்டன்  என்ற யானைப்பாகன் புற்றுநோயால் காலமானார்.


Also Read | மோடி ஜி இதை கேளுங்க, க்யூட்டான காஷ்மீர் குழந்தையின் கோரிக்கை நிறைவேறியதா


ஜூன் மூன்றாம் தேதியன்று இறந்த ஓமனசேட்டனுக்கு அவர் வளர்த்து வந்த யானை இறுதி மரியாதை செய்தது. பாகனின் உடலின் அருகே குனிந்து, தனது துதிக்கையை தூக்கி, கண்ணீருடன் மரியாதை செலுத்தியது. இந்தக் காட்சி அங்கு கூடியிருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.  


 



குன்னக்காட் தாமோதரன் நாயர் (Kunnakkad Damodaran Nair) என்னும் ஓமனசேட்டன், விலங்குகளை குறிப்பாக யானைகள் மீது அதிக பாசம் கொண்டவர். கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக அவற்றை பராமரித்து வந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புற்றுநோயுடன் நீண்டகாலமாக அவதிப்பட்டு வந்த ஓமனசேட்டன், ஜூன் 3 ஆம் தேதி தனது 74 வயதில் உயிரிழந்தார்.


இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது.  ”விலங்குகள், குறிப்பாக யானைகளுக்கு இவ்வளவு பச்சாதாபமும் புத்திசாலித்தனமும் இருக்கிறது .. சில சமயங்களில் மனிதர்களை விடவும் அதிகமாகவே இருக்கிறது” என்று ஒருவர் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.


Also Read | சச்சின் டெண்டுல்கரின் வெற்றி ரகசியத்தை சொல்லும் சத்குரு; இது சரியா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR