காட்டாற்று வெள்ளத்தில் மீன்களை இரையாக்கும் கரடிகள்: வைரல் வீடியோ
காட்டாற்று வெள்ளம்போல் செல்லும் ஆற்று நீரில் கரடிகள் மீன் பிடித்து சாப்பிடும் வீடியோ காண்போரை ரசிக்க வைத்துள்ளது. இது எப்படி சாத்தியம்? என இணைய உலகம் மெய்சிலிர்த்துள்ளது.
மணிக்கணக்கில் தூண்டில் வைத்து மீன்பிடிப்பதே மிகப்பெரிய கஷ்டமாக இருக்கும் நிலையில் கரடிகள் லாவகமாக மீன்பிடிப்பது இணையவாசிகளைக் கவர்ந்துள்ளது. மனிதர்களைப் போலவே விலங்குகள் ஸ்மார்டாக சிந்திக்கக்கூடியவை என விலங்குகளை நேசிப்பவர்கள் கூறுவதுண்டு. வீடுகளில் இருக்கும் நாய் மற்றும் பூனை முதல் வனப்பகுதிகளில் வசிக்கும் விலங்குகள் வரை என அவற்றிடம் இருந்து சில விஷயங்களை கற்றுக் கொள்ளலாம்.
உணவை தேடிப் பிடிப்பதற்கு அந்த விலங்குகளிடம் சில ஸ்மார்ட்டான ஐடியாக்கள் இருக்கும். நாம் சிந்திப்பதைக் காட்டிலும் அவை அவுட்டாப் பாக்சில் யோசித்து, எளிமையாக இரையைப் பிடித்துவிடும். அந்தவகையில் இப்போது இணையத்தில் வைரலாகியிருக்கும் வீடியோவில் மூன்று கரடிகள் லாவகமாக மீன் பிடிக்கின்றன. அதெப்படி சாத்தியம் என நீங்கள் கேட்கலாம். அதுவும் ஓடும் நீரில் மீன் பிடிப்பது என்பதெல்லாம் அசாத்திய திறமை வேண்டும். அதனை லாவகமாக கரடிகள் செய்து காட்டியிருக்கின்றன.
அந்த வீடியோவில் ஓடும் நீர் கீழே விழும் தடுப்புச் சுவர் பகுதியில் வரிசையாக நிற்கின்றன. நீர் கீழே விழும்போது துள்ளிக் குதிக்கும் மீன்கள் தான் அவற்றின் இலக்கு. இதற்காக அந்த இடத்தில் சரியாக நிற்கும் கரடிகள், துள்ளிக் குதிக்கும் மீன்களை லாவகமாக பிடித்து இரையாக்கிக் கொள்கின்றன. இந்த வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்திருப்பதுடன், வைரல் லிஸ்டிலும் இடம்பிடித்துள்ளது.
மேலும் படிக்க | Viral Video: மின்னல் வேகத்தில் பாய்ந்து இரையை துல்லியமாக பிடிக்கும் சிறுத்தை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ