பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் மற்றும் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து என பலர் நடித்திருக்கிறார்கள். 


சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். காதலையும், வாழ்வியலையும் அதனைச்சுற்றி நடைபெறும் உளவியல் அரசியலையும் பேசும் படமாக உருவாகி ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் டீசர் நேற்று (ஜூன் 4) வெளியாகி உள்ளது.



ஏற்கனவே இப்படத்தில் இடம் பெற்ற கருப்பி என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.