சமூக ஊடகங்களில் பதிவிடும் வீடியோக்கள் வைரல் ஆவதற்காக மக்கள் மிகவும் கடினமாக முயற்சி செய்கிறார்கள். ஆனால் சில சமயம் அது வேடிக்கையை விட எரிச்சலூட்டுவதாக உணரத் தொடங்குகிறது. சிலர் தங்கள் வீடியோக்களை மிகவும் பிரபலமாக்குவதற்கு எதையும் செய்ய தயாராக உள்ளனர். நெகட்டிவ் ஆகா இருந்தாலும் வைரல் ஆவதற்காக துணிந்து இறங்குகின்றனர். இதனால் தரமான வீடியோவிற்கும், அசிங்கமான செயலுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் போகிறது. தற்போது பிரான்க் என்ற பெயரில் சாலையில் செல்பவர்களை துன்புறுத்தும் செயல்கள் அதிகமாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க |  பாம்புக்கு ஷாக்கடிச்சா எப்படியிருக்கும்? அது தெரியாம தான இந்த பயபுள்ள மின்கம்பியில தொங்குது! பீதி கிளப்பும் வீடியோ...


உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்சியில், தனது நண்பருடன் பைக்கில் சென்றுகொண்டிருந்த இரு இளைஞர் சைக்கிளில் சென்ற முதியவர்கள் ஒருவர் மீது ஸ்பிரே அடிக்கின்றனர்.  அந்த முதியவர் என்ன சொல்கிறார் என்பதை காதில் வாங்காமல் அவர்கள் தொடர்ந்து ஸ்பிரே அடித்துவிட்டு அங்கிருந்து ஓடி விடுகின்றனர். மேலும் இன்ஸ்டாகிராமில் இதனை ரீல்ஸ் ஆகவும் பதிவிட்டு உள்ளனர். முழு விஷயத்தையும் படம்பிடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதும், போலீசார் விரைந்து அந்த இளைஞரை கைது செய்தனர். இந்த சம்பவம் ஜான்சியில் உள்ள சிப்ரி பஜார் மேம்பாலம் அருகே நடந்துள்ளது.



இந்த வீடியோ வைரலாகி போலீசார் நடவடிக்கை எடுத்தபோது அந்த இளைஞர் பயத்தில் இன்ஸ்டாகிராமில் இருந்து வீடியோவை நீக்கிவிட்டார். எனினும், மாலையில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். ஜான்சி காவல்துறையின் அதிகார்வப்பூர்வ கணக்கில் அந்த இளைஞர் நடக்க முடியாமல் தள்ளாடும் வீடியோ பதிவிடப்பட்டது. மேலும் அந்த இளைஞர் இந்த சம்பவம் தொடர்பான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "நான் செய்த தவறுகளுக்காக நான் தண்டிக்கப்பட்டுள்ளேன், நான் செய்ததை சமூக ஊடகங்களில் யாரும் செய்ய வேண்டாம் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.


குற்றம் சாட்டப்பட்ட வினய் யாதவ் என்ற இளைஞர் இதே போன்று பல வீடியோக்களை ஆன்லைனில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் 1,00,000 க்கும் அதிகமானோர் அவரை பாலோ செய்கின்றனர், அவரது வீடியோக்களை பலர் பார்க்கிறார்கள். அவற்றில் ஒன்று சுமார் 45 மில்லியன் மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. அவர் தனது வீடியோக்கள் மூலம் ஒவ்வொரு மாதமும் சுமார் 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார். அதனால் தான் இதுபோன்ற வீடியோக்களை உருவாக்குகிறார். இப்படிப்பட்டவர்கள் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக போலீசார் கூறுகின்றனர். பொதுமக்கள் யாரும் இது போன்ற நபர்களை பாலோ செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 



இந்த சம்பவம் தொடர்பாக நகர காவல்துறையில் பணிபுரியும் ஞானேந்திர குமார் சிங் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். "இரண்டு நபர்கள் பைக்கில் செல்வதையும், ஒரு பெரியவர் சைக்கிளில் செல்வதையும் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அந்த நபர் பெரியவரின் முகத்தில் ஸ்பிரே அடிக்கிறார். இதற்காக கோடன் கிராமத்தை சேர்ந்த வினய் யாதவ் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். வினய் யாதவ் ஒரு யூடியூபர், இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | விபத்தில் தூக்கி வீசப்பட்ட பெண்! பாலத்தின் இடையில் சிக்கிய வைரல் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ