)
ஆபத்து நேரங்களில் என்ன செய்வது? மின்சாரம் ஷாக்கடித்தால் முதலுதவி என்ன செய்வது என பல விஷயங்களில் சிலருக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டிருக்கும். ஆனால், யாராக இருந்தாலும், ஆபத்து நேரத்தில், கற்று வைத்திருக்கும் வித்தை எல்லாம் கைகொடுக்குமா என்றால் அது தெரியாது. ஆனால், அச்சம் என்பது ஒரு விஷயத்தை பார்த்த நொடியே ஏற்படுமா என்றால், அதில் மாற்றுக் கருத்தே இருக்காது. அப்படி யாருக்காவது இருந்தால், இந்த வீடியோவை பார்த்தால் போது.
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்றால், பாம்பைக் கண்டு மின்சாரம் பயப்படுமா என்ன? ஆனால், பாவம் பாம்புக்கு இந்த சிதம்பர ரகசியம் தெரியவில்லை. அதனால் தான், படுக்க இடம் கிடைக்கவில்லை என்று, மின்கம்பத்தில் ஏறி படுத்துவிட்டது என்று தோன்றுகிறது. இல்லை என்றால், ஹாயாக வெயில் காய மின்கம்பத்தில் ஏறிவிட்டதோ?
மின்கம்பத்தில் ஏறி யாராவது வெயில் காய்வார்களா? என்ன முட்டாள்தனம் என்று தோன்றுகிறதா? இந்த வீடியோவைப் பார்த்தால் உங்களுக்கு உண்மை புரிந்துவிடும். இந்த வீடியோ நேச்சர் இஸ் அமேசிங் என்ற எக்ஸ் தளத்தில் பதிவாகியுள்ள வைரல் வீடியோ...
Just look at this Reticulated python, the longest and most aggressive non venomous snake in the world. pic.twitter.com/SjgbngXW9g
— Nature is Amazing (@AMAZlNGNATURE) September 20, 2024
இப்படிப்பட்ட வீடியோ வைரலாகாவிட்டால், வேறு எந்த வீடியோ வைரலாகும்? என்ற கேள்வியை எழுப்பும் அதிர்ச்சி வீடியோ இது.
பாம்பு எப்படி இவ்வளவு உயரத்திற்கு போனது என்ற கேள்வியை விட, யாராவது வந்து பாம்பை காப்பாத்துங்க என்று தான் சொல்லத் தோன்றுகிறது. யாராவது அந்த பக்கம் நடந்து போவார்களா? என்ற கேள்விக்கு ஆமாம், நான் நடந்து போவேன் அப்படின்னு பதில் சொல்லும் தைரியம் யாருக்கு இருக்கு?
பாம்பின் அட்டகாசம் என்று சொன்னாலும் பாவம் பாம்புக்கு இந்த ஆபத்து விஷயம் தெரியாது. ஏன், தான் செல்லக்கடி கடித்தாலும், செல்லம் கொஞ்சுகிறவர் அம்போ என எமனுக்கு நண்பராக வேண்டியது தான் என்ற உண்மையும் பாம்புக்கு தெரியாது. தெரியாத அப்பாவியாக இருப்பதால் அது ஜாலியாக இருக்கிறது.
மின்கம்பியில் சிக்கிக்கிட்டயே, உனக்கு ஆப்பா இல்லை அல்வாவா என இந்த வீடியோவிற்கு சிலர் கமெண்டும் போட்டிருக்கின்றனர். உண்மையில் ஆப்பும் இல்லை, அல்வாவும் இல்லை, இந்த வீடியோ பார்ப்பவரை எல்லாம் பீதியாக்கிக் கொண்டிருக்கிறது. முடிந்தால், கொஞ்சம் பாம்பிற்கு அட்வைஸ் சொல்லிப் பாருங்களேன்...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ