Viral Video: ‘வசூல் ராஜா MBBS’ படத்தை மிஞ்சும் வகையில் ஹைடெக் காப்பிடித்த மாணவர்!
தேர்வுகளின் போது காகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டு பிட் அடித்த காலம் மலையேறி விட்டது. இப்போது தொழில்நுட்ப உதவியுடன் ஹை டெக் லெவலில் காப்பி அடிப்படுகின்றன.
தேர்வுகளின் போது காகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டு பிட் அடித்த காலம் மலையேறி விட்டது. இப்போது தொழில்நுட்ப உதவியுடன் ஹை டெக் லெவலில் காப்பி அடிப்படுகின்றன. உத்திர பிரதேசத்தில் சமீபத்திய ஹைடெக் காப்பியடித்த வழக்கு, வசூல் ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தை உங்களுக்கு நிச்சயம் நினைவூட்டும். அதுவும் இந்த மோசடி கண்டறியப்பட்டது, காவல்துறை ஆள்சேர்ப்பு தேர்வில் என்பது கூடுதல் சுவாரஸ்யம் கொடுக்கும் தகவல்.
உத்திரபிரதேச (Uttar Pradesh) மாணவர் ஒருவர் சப்-இஸ்பெக்டர் பணிக்கான போட்டித் தேர்வில், ஹைடெக் காப்பி அடிக்கும் வேலையில் ஈடுபட்டது ஒரு பக்கம் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஒரு சேர கொடுத்துள்ளது . ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், சந்தேகத்தின் போது சோதனையில் மாணவர் பிடிப்பட்டது தொடர்பான பகிர்ந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
வீடியோவை இங்கே காணலாம்:
ALSO READ | "இப்படியா பண்ணுவது" மாமியாரிடம் மனைவியை சிக்க வைத்த கணவன் -Viral Video
சந்தேகத்தின் பேரில் நடத்திய விசாரணை நடத்தியபோது, மாணவர் தலையில் ஒரு விக் பொருத்திக் கொண்டு, அதில் ப்ளுடூத் சாதனத்தை பொருத்தியுள்ளார். கேட்ட்டு எழுத இயர்போன்களை காதில் இருந்ததை போலீசார் கண்டனர். செக்யூரிட்டி நபர் அவரது காதுகளுக்குள் பொருத்தப்பட்டிருந்த இரண்டு ஏர்போட்களையும் கண்டுபிடித்தார்.
இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஏர்போட்களின் அளவு மிகவும் சிறியதாக இருந்ததால், மாணவர் தனது காதில் இருந்து சாதனத்தை அகற்றத் தவறிவிட்டார். அதனால் மாட்டிக் கொண்டார்.
டிசம்பர் 21 அன்று பகிரப்பட்ட வீடியோ, 58.9k பார்வைகளைப் பெற்றுள்ளது. வ்யூஸ் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது. நெட்டிசன்களும் நகைச்சுவையான கருத்துகளால் கருத்துப் பகுதியை நிரப்பி விட்டனர். சில நெட்டிசன்கள் இந்த புதுமையான சாதுர்யமான ஹைடெக் காப்பியை பாராட்டி, உளவு வேலைக்கு ஏற்ற ஆள் தான் எனக் கூறி உடனே அவரை உள்வுத் துறைக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பத்தை நிரப்புமாறு நகைச்சுவையுடன் கருத்து தெரிவித்துள்ளனர்.
ALSO READ | Viral Video: ‘என் ஆளை விடுங்க’; கோழிக்காக சேவல் போட்ட சண்டை வீடியோ!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR