Viral Video: நாய்க்குட்டியை கட்டி அணைக்கும் பூனை; இணையத்தை கலக்கும் வீடியோ!
வைரல் வீடியோ: பூனைக்குட்டிகள் மற்றும் நாய்க்குட்டிகளின் வீடியோக்களுக்கு சமூக ஊடகங்களில் பெரும் ரசிகர்கள் உள்ளனர்.
சமூக ஊடகத்தில் பகிரப்படும் சில வேடிக்கையான, அரிய தருணங்களை காட்டும் வீடியோக்கள் நம் மனதை மிகவும் லேசாக்கி விடும். இணையத்த்தில் வைரலாகும் வீடியோக்கள், சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. பூனைகளுக்கும் நாய்களுக்கும் இடையிலான நட்பை வெளிப்படுத்தும் தருணங்கள் பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். இப்படி ஒரு காணொளியை பார்த்தால் மக்களின் மனநிலை நேர்ம்றை எண்ணங்கள் நிறைந்து இருக்கும். தற்போது ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வரும் வீடியோவில் நாயும் பூனையும் ஒன்றையொன்று கட்டிப்பிடிப்பது போன்ற காட்சிகள் வெளியாகி உள்ளது.
அந்த காட்சிகளில், தூங்கிக் கொண்டிருக்கும் நாய்க்குட்டி பூனைக்குட்டியின் மேல் வைக்கப்படுகிறது. நாய்க்குட்டியை தன் மீது வைக்கும்போது பூனை காட்டும் ரியாஷனும் மிகவும் சுவாரஸ்யமானது. இந்த வீடியோவை ட்விட்டரில் 13 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.இந்த இரண்டு விலங்குகளுக்கும் இடையிலான அற்புதமான பிணைப்பைக் கண்டு பலர் ஆச்சரியப்பட்டு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சமூக வலைதளத்தில் வைரலாகும் நாய் குட்டி - பூனைக்குட்டி வீடியோவைக் கீழே காணலாம்:
நாய்க்கும் பூனைக்கும் இடையிலான பாட பிணைப்பை வெளிப்படுத்தும் அற்புதமான இந்த வீடியோ 154k என்ற அளவிற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது.
மேலும் படிக்க | Viral Video: பாம்பை கபளீகரம் செய்ய துடிக்கும் ராஜநாகம்; இணையத்தை அதிர வைத்த வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ