லூட்டி அடிக்கும் பூனை, கடுப்பான நாய்: ஜம்முனு ஒரு ஜிம் சண்டை, வைரல் வீடியோ

Dog Cat Funny Viral Video: ‘அட..இது சூப்பரா இருக்கே’ என இணையவாசிகள் வியக்கும் அளவுக்கு ஒரு விடியோ வைரல் ஆகி வருகின்றது. ஒரு நாயும் பூனையும் டிரெட்மில்லில் போட்டியிடும் வீடியோதான் இது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 15, 2022, 04:25 PM IST
  • மனிதர்கள் மட்டும்தான் வொர்க் அவுட் செய்ய வேண்டுமா?
  • நாங்களும் வொர்க் அவுட் செய்து ஃபிட்டாக இருக்க வேண்டாமா?
  • நாய், பூனையின் வைரல் வீடியோ.
லூட்டி அடிக்கும் பூனை, கடுப்பான நாய்: ஜம்முனு ஒரு ஜிம் சண்டை, வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

செல்லப்பிராணிகளான நாய், பூனை போன்றவற்றின் வீடியோக்கள் விரைவில் வைரல் ஆகி விடுகின்றன. நாயும் பூனையும் ஒரே வீடியோவில் இருந்தால் கேட்கவே வேண்டாம். அப்படி ஒரு வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இது இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. 

செல்லப்பிராணிகளின் வீடியோக்கள் என்றாலே அவை கண்களுக்கு விருந்துதான். இந்த வீடியோவும் அப்படித்தான் உள்ளது. இந்த வீடியோ-வில் இரு ஹீரோக்கள்- ஒரு நாய் மற்றும் ஒரு பூனை!! ஆனால், வீடியோவில் இரண்டுக்கும் நடுவில் பயங்கர போட்டி நடக்கிறது. போட்டிக்கான காரணம்தான் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றது. 

ஒரு டிரெட்மில்லில் ஏறி உடற்பயிற்சி செய்ய இரண்டுக்கும் இடையில் கடுமையான போட்டி நடக்கிறது. மனிதர்கள் மட்டும்தான் வொர்க் அவுட் செய்ய வேண்டுமா? நாங்களும் வொர்க் அவுட் செய்து ஃபிட்டாக இருக்க வேண்டாமா என கேட்கும் வகையில் இரு விலங்குகளும் போட்டிப்போட்டுக்கொண்டு டிரெட்மில்லில் ஏறுகின்றன.

மேலும் படிக்க | அச்சச்சோ.. என்னால நம்பவே முடியலயே: மேஜிக் பார்த்த குரங்கின் வேற லெவல் ரியாக்‌ஷன் 

வீடியோவின் துவக்கத்தில் நாயும் பூனையும் டிரெட்மில்லில் இருப்பதை காண முடிகின்றது. நாய் அதில் நன்றாக நடக்க, பூனை திண்டாடுகிறது. ஒரு கட்டத்தில் பூனை கீழே இறங்கிவிடுகிறது. அதன் பிறகு மீண்டும் டிரெட்மில்லில் ஏற பூனை கடுமையாக முயற்சிக்கிறது. அனால், அதனால் ஏற முடியவில்லை. தன்னால் மட்டும் டிரெட்மில்லில் ஏற முடியாததால், பூனை கடுப்பாகி, நாயின் காலை பிடித்து அதையும் கீழே இழுக்க முயற்சிக்கிறது.

பின் நாயின் கால்களுக்கு இடையில் புகுந்து செல்ல முயற்சிக்கிறது. சிறிது நேரத்துக்கு பூனை இரு கால்களை மட்டும் டிரெட்மில்லில் வைத்து நடக்க முயல்கிறது. ஆனாலும், அது நினைப்பது போல், அதனால் முழுமையாக டிரெட்மில்லில் நடக்க முடியாமல் அது ஏமாறுகிறது. பூனை எடுக்கும் முயற்சிகளும், கடுப்பாகி அது செய்யும் குறும்புகளும் பார்ப்பதற்கு மிக வேடிக்கையாக உள்ளது. பூனை பாட்ய் படுத்தினாலும், எதற்கும் அசராமல் நாய் டிரெட்மில்லில் நடப்பதும் பார்ப்பதற்கு ஆச்சரியமாக உள்ளது.

எக்சர்சைஸ் பண்ண சண்டை போட்ட நாய், பூனையின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ Yog என்ற ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. செல்லப்பிராணிகளின் வீடியோக்களை மட்டுமே பகிரும் கணக்கு இது. இந்த வீடியோவுக்கு இதுவரை சுமார் 3 மில்லியன் வியூஸ்களும் 130.8 ஆயிரம் லைக்குகளும் கிடைத்துள்ளன. 17.3 ஆயிரம் பேர் இதை ரீட்வீட் செய்துள்ளனர். இணையவாசிகள் இதற்கு பல கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | சும்மா இருந்த பசுவை சீண்டிப்பார்த்த நபர்: வெச்சி செஞ்ச பசு, ஷாக் கொடுக்கும் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News