Viral Video: அகோரப் பசியுடன் தாக்கும் 14 சிங்கங்கள்; உயிர் காக்க போராடும் ஒற்றை யானை!
யானைகளின் இயற்கை எதிரிகளில் முதலிடத்தில் இருப்பது சிங்கங்கள். உருவத்தில், பெரிய அளவில் இருப்பதால், அது அவர்களுக்கு விருப்பமான இரையாக இல்லாவிட்டாலும், சிங்கங்கள் யானைகளைத் தாக்கும்.
சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், காட்டு விலங்குகள் வேட்டை தொடர்பான சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன.
யானைகளின் இயற்கை எதிரிகளில் முதலிடத்தில் இருப்பது சிங்கங்கள். உருவத்தில், பெரிய அளவில் இருப்பதால், அது அவர்களுக்கு விருப்பமான இரையாக இல்லாவிட்டாலும், சிங்கங்கள் யானைகளைத் தாக்கும். யானையைக் கொல்லும் சக்தி வாய்ந்த ஒரே வேட்டையாடும் விலங்கு சிங்கம் மட்டுமே. யானைகள் உருவத்தில் பெரியதாக இருப்பதால், சிங்கங்கள் ஒன்றை வேட்டையாடினாலே போதும். அவை சில நாட்கள் வேட்டையாட வேண்டியதில்லை. இருப்பினும், வேட்டையாடும் சிங்கங்களுக்கு யானையை கொல்வது அத்தனை எளிதல்ல . இதனாலேயே பத்திற்கும் மேற்பட்ட சிங்கங்கள் ஒரு யானையை சேர்ந்து தாக்குகின்றன.
இந்த அரிய காட்சியை கிளெமென்ட் பென் என்பவர் கேமராவில் படம் பிடித்தார். அந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி சுசந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். "ஒற்றை யானை 14 சிங்கங்களை எதிர்த்து வெற்றி பெறுகிறது... காட்டின் ராஜாவாக யார் இருக்க வேண்டும்?" என பதிவீடு ட்வீட் செய்துள்ளார். இந்த வீடியோ மிகவும் வைரலாகியுள்ளது.
மேலும் படிக்க | Viral Video: 1956 பிரிட்ஜில் இத்தனை அம்சங்களா... வியக்க வைக்கும் விளம்பரம்
வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:
காணொளியில், ஆற்றங்கரையில் யானை ஒன்று சிங்கங்களால் தாக்கப்படும் காட்சியைக் காணலாம். ஒரு சிங்கம் அவன் முதுகில் ஏறி யானையை தாக்குகிறது. அதோடு, மேலும் சில சிங்கங்கள் அதனைத் தாக்குகின்றன. யானை சுற்றி சுழன்று தண்ணீருக்குள் செல்கிறது, கோரப் பசியுடன் தாக்கும் சிங்கங்களைத் தன் முதுகில் இருந்து கீழே தள்ளுகிறது.
மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ