கீரி - பாம்பு இரண்டுக்கும் பகை என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். கீரிகள் உள்ள இடங்களில் பாம்புகள் இருக்காது என்றும் கூறுவதுண்டு. கீரியின் உடலில் இயற்கையாகவே விஷ எதிர்ப்பு சக்தி உள்ளதால், பாம்பு கொத்தினால், கீரியின் உடலில் காயங்கள் தான் ஏற்படுமே தவிர, அது சாகாது என்று கூறுவார்கள். பொதுவாக பாம்பு கீரி சண்டையில் பாம்பை கீரி கொன்றுவிடும். பாம்பு படம் எடுத்து கீரியை தாக்கி களைத்துப் போன பின், சோர்வாக உள்ள பாம்பின் தலையை கடித்து கீரி கொன்றுவிடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாகப்பாம்புகள் உண்மையில் கீரிகளை கண்டு மிகவும் பயப்படும் என கூறப்படுகிறது. தனது பரம எதிரியான கீரியுடன் மோதுவதைத் தவிர்க்கவே பாம்புகள் முயற்சி செய்யும். நாகப்பாம்புகளுடன் மோதும் சண்டையின், கிட்டதட்ட 75 முதல் 80 சதவீத சண்டைகளில், கீரிகளே வெற்றி பெறுகின்றன. தற்போது இணையத்தில் வைரலாகி வரும் காணொளியிலும், கீரியின் தாக்குதலுக்கு முன்னால் நாகம் ஒன்றுமே செய்ய முடியாமல் போவதைக் காணலாம்.


மேலும் படிக்க | Viral Video: 1956 பிரிட்ஜில் இத்தனை அம்சங்களா... வியக்க வைக்கும் விளம்பரம்


வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:


 



வெளியாகியுள்ள வீடியோவில், ​​பல அடி நீளமுள்ள நாகத்தை கீரி ஒன்று பயங்கரமாக மிகம் வேகமாக தாக்குவதைக் காணலாம். பாம்புக்கும் கீரிக்கும் இடையில் நடந்த சண்டையில், நொடியில், நாக பாம்பின் தலையை கீரி கவ்விப் படித்தது. இந்த வீடியோவில், தன்னை தாக்க வரும் கீரியை பாம்பு தாக்க முயற்சிப்பதைக் காணலாம், ஆனால், பின்னர் கீரியின் புத்தாலித்தனமான தாக்குதலுக்கு முன்னால், தாக்குபிடிக்க முடியாமல் திணறியது. பாம்பு கீரியை தாக்கும் போதே, புல்லட்டின் வேகத்தில் தாக்கி, நாகப்பாம்பிற்கு பதில் தாக்குதல் நடத்த நேரமே கொடுக்கவில்லை. பாம்பு தாக்குபிடிக்க முடியாமல் போனது. 


மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ