வன விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. சில பார்ப்பவர்களுக்கு பீதியை ஊட்டுவதாகவும், சில வேடிக்கையானதாகவும், சில வியப்பில் ஆழ்த்துபவையாகவும் இருக்கும். இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன.  வனவிலங்கு வீடியோக்களைப் பொறுத்தவரை, அவற்றில் பெரும்பாலானவை வேட்டையாடும் காட்சிகள். அதே சமயத்தில் மனதிற்கு இதமான விலங்குகளில் காதல் காட்சிகளும் அதிக அளவில் பகிரப்படுகின்றன. அந்த வகையில் மயில்களின் காதலை விவரிக்கும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் தேசிய பறவையாக இருக்கும் மயில்கள் மிகவும் கவர்ச்சியான பறவை என்றால் மிகையில்லை. தோகை விரித்து ஆடும் மயிலை ரசிக்காதவர்கள் இருக்க முடியுமா என்ன. மயில்களில் ஆண் மயில் தனது அழகான தோகைக்காக பெயர் பெற்றது. பொதுவாக, ஆண் மயில் பெண் மயிலைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும். இதன் தோகையில் வரிசையாக இருக்கும் 'கண்' போன்ற வடிவங்கள், தோகையை விரிக்கும் போது மிகவும் அழகாகத் தோற்றமளிக்கும்.


வைரலாகும் மயில் ஆட்டத்தை கீழே காணலாம்:



உலகின் மிக அழகான பறவைகளில் ஒன்று மயில், அதன் வண்ணம், விசிறி போன்ற வால், நீண்ட வடிவான இறகுகள், இணையைக் கவர அவைகள் ஆடும் அற்புத நடனம் என பார்ப்பவர்களை எப்போதும் பிரம்மிக்க வைக்கின்றன. பெண் மயிலை கவர்வதைத் தவிர மழை வரும் முன்னரும் மயில்கள் தோகை விரித்து நடனமாடும். சில சமயங்களில் எதிரிகளை அச்சுறுத்தவும் தோகையை விரித்து, வேகமாக அசைத்து, ஒலி எழுப்பி பயமுறுத்தும். ஆங்கிலத்தில் மயிலின் பொதுப்பெயர் பீபௌல் (Peafowl) என்பதாகும். ஆண் மயிலினை பீக்காக் (peacock) என்றும், பெண் மயிலினை பீஹென் (peahen) என்றும் அழைக்கிறோம்.


மேலும் படிக்க | அட பாவி மனுஷா.. இரக்கமின்றி மயிலின் இறகுகளை பறித்த நபர்: வீடியோ வைரல்
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ