இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
மயில் இந்தியாவின் தேசீயப் பறவை. மயிலுக்கு முதல் எதிரி அதன் அழகிய தோகைப் பீலிகள். இதை வைத்து கை விசிறிகள் தயாரிக்க பலர் மயில்களைக் கொல்கின்றனர். இந்திய மயிலுக்கு நீல மயில் என்றொரு பெயரும் உண்டு. காரணம் இதன் நிறம் மின்னும் நீலப் பச்சை. இந்தொனேசியா, பர்மா இங்கெல்லாம் காணப்படும் மயில் பச்சை வண்ணம் கொண்டது என்பதால் அது பச்சை பயில் என்றழைக்கப் படுகிறது.
உலகின் மிக அழகான பறவைகளில் ஒன்று மயில், அதன் வண்ணம், விசிறி போன்ற வால், நீண்ட வடிவான இறகுகள், இணையைக் கவர அவைகள் ஆடும் அற்புத நடனம் என பார்ப்பவர்களை எப்போதும் பிரம்மிக்க வைக்கின்றன. இவ்வளவு பிரம்மிக்க வைக்கும் அழகான மயிலை கொடுமைப் படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகி இணையவாசிகளை கடுப்பேத்தி உள்ளது. சமீபத்தில், மத்திய பிரதேசத்தின் கட்னி நகரில் இருந்து மிகவும் வேதனையான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் ஒரு இளைஞன் மயிலுடன் கொடுமையின் எல்லையை கடக்கும் காட்சி வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், அந்த நபர் இரக்கமில்லாமல் மயிலின் இறகுகளை பறிப்பது போல் தெரிகிறது.
உண்மையில், ஒரு இளைஞன் இரக்கமின்றி மயிலின் இறகுகளைப் பறிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அப்போது அவர் சிரித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். மயில் இறகுகளை பறிக்கும் போது அந்த இளைஞன் சிரித்துக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்றையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளான். இந்த வீடியோ வைரலானதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் அவரைத் தேடி வருகின்றனர்.
கொடூரமாக பறிக்கப்பட்ட மயில் இறகுகள்
வைரலான வீடியோவை சிராஜ் நூரானி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், மேலு அதில் அவர், வீடியோவில் காணப்பட்ட நபர் மத்திய பிரதேசத்தில் உள்ள கட்னியை சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில், அந்த நபர் கொடூரமாக மயிலின் தோகை பறிப்பதைக் காணலாம். அப்போது அவருக்கு அருகில் ஒரு பெண்ணும் காணப்படுகிறாள். இதைப் பார்த்த பயனாளிகள் அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
வைரல் வீடியோவை இங்கே காணுங்கள்:
#Bhopal: A man stripping the feathers off a peacock in #MadhyaPradesh's Katni has created a furore on social media.
Police have identified the accused and say they are looking for the accused.@Anurag_Dwary Video pic.twitter.com/r4tc4PoWk1
— Siraj Noorani (@sirajnoorani) May 21, 2023
இளைஞர் மீது வழக்குப் பதிவு
தற்போது, கட்னியின் கோட்ட வன அதிகாரி கவுரவ் சர்மா கூறுகையில், சமீபத்தில் வைரலான வீடியோவில், ஒரு நபர் மயிலுக்கு அதீத கொடுமை செய்வதாக காணப்பட்டது. தற்போது அந்த நபர் அதுல் கோஹன்ஹே என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர்கள் மீது வனவிலங்கு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இந்த வீடியோ 20 நாட்களுக்கு மேல் பழமையானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வீடியோ வைரலானதையடுத்து அந்த நபர் தலைமறைவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பாம்பை மென்று சாப்பிட்ட நபர்..அதுவும் உயிருடன்..திக் திக் சம்பவம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ