நொய்டாவில் உள்ள மேம்பாலத்தில் 29 வயதான பெண் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், தூக்கி வீசப்பட்ட அந்த பெண் மேம்பாலத்திற்கு இடையில் உள்ள தூண்களில் சிக்கி கொண்டார். இதனை பார்த்த இரண்டு ஆண்கள் அவரை காப்பாற்ற கீழ இறங்கினர். ஆனால் அவர்களும் அந்த பெண்ணுடன் அங்கேயே சிக்கிக்கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 35 நிமிடங்களுக்கு பிறகு காயமடைந்த அந்த பெண்ணை மேம்பாலத்தின் தூணில் இருந்து போலீசார் கிரேன் மூலம் காப்பாற்றினர். பின்னர், மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இடித்த வாகனத்தை போலீசார் யார் என்று விசாரணை செய்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சுனாமி போன்ற அலையில் ஸ்விம்மிங்கை போடும் மக்கள்..பயமே இல்லையா? வைரல் வீடியோ..


நொய்டாவின் கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் (ஏடிசிபி) மணீஷ் மிஸ்ரா இந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார். அதில், மதியம் 12.45 மணியளவில் அந்த பெண் அவரது நபருடன் ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். நொய்டாவில் உள்ள செக்டார் 18ல் இருந்து செக்டார் 61க்கு இருவரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் செக்டார் 21க்கு அருகில் சென்ற போது, ​​அவர்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு கார் U-டர்ன் எடுப்பதற்காக திரும்பி உள்ளனர். இதனால் உடனே சடன் பிரேக் அடித்ததால் ஸ்கூட்டரின் பேலன்ஸ் தடுமாறி பின்னால் அமர்ந்து இருந்த அந்த பெண் தூக்கி வீசப்பட்டுள்ளார்,” என்று மணீஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.



இரண்டு மேம்பாலத்தை இணைக்கும் தூண்களுக்கு இடையில் அவர் சிக்கி கொண்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக அந்த பெண் பாலத்தில் இருந்து கீழே விழவில்லை. மேலும் உயரமான தூண்களின் ஸ்டாப்பர்களைப் பிடித்துக் கொண்டார்” என்று ஏடிசிபி கூறினார். சுமார் 35 நிமிடங்களுக்கு காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையின் உதவியுடன் கிரேன் கொண்டு அவர்களை மீட்கும் முயற்சி நடைபெற்றது. அந்த பெண்ணை காப்பாற்ற சென்ற இரண்டு ஆண்களும் அங்கு மாட்டி கொண்டனர். "இந்த சம்பவம் தெரிந்த அடுத்த ஐந்து நிமிடங்களில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அங்கு வந்தது, அந்தப் பெண்ணுக்கு கண்ணுக்குத் தெரியும் அளவில் பெரிதாக காயங்கள் ஏற்படவில்லை. இருப்பினும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஸ்கூட்டரை ஓட்டி வந்த அவரது நண்பருக்கு காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.



மேலும் இந்த சம்பவத்திற்கு காரணமான அந்த காரை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி பிறகு விடுவித்தனர். " இந்த விபத்து எதனால் ஏற்பட்டது, யாருடைய அலட்சியம் காரணமாக ஏற்பட்டது என்பதை தெரிந்து கொள்ள விசாரணையைத் தொடங்கியுள்ளோம்," என்று மிஸ்ரா கூறினார்.


மேலும் படிக்க | யானைக்கும் யானைக்கும் சண்டை தசரா கொண்டாட்டத்தில் நடந்த மோதல் வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ