Whale Ambergris: வைரத்தை விட மிக மதிப்பு மிக்கது திமிங்கிலத்தின் வாந்தி..!!!
அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கல வாந்தியை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று பேரை வன அதிகாரிகள் கைது செய்தனர்.
Whale Ambergris: அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கல வாந்தியை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று பேரை வன அதிகாரிகள் கைது செய்தனர். இதைக் கேட்டு திமிங்கல வாந்தியா, அதை யார் விற்பார்கள், யார் வாங்குவார்கள் என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். திமிங்கிலத்தின் வாந்தியை விற்பனை செய்வது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் ஆண்ட்ரோட் மற்றும் அமினி தீவுகளில் வசிப்பவர்கள் என லட்சத்தீவின் சுற்றுச்சூழல் துறை மற்றும் வனத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
கேரளாவின் வனத்துறை அதிகாரிகள் 1.4 கிலோ அம்பர்கிரிஸ் வைத்திருந்தவர்களை கைது செய்துள்ளனர். இதன் விலை சுமார் 1.4 கோடி. ஆம்பர்கிரிஸ், திமிங்கல வாந்தி என்றும் அழைக்கப்படுகிறது.
ALSO READ | Viral Photos: மலைப்பாம்பு இரத்த வாந்தி எடுப்பதை பார்த்திருக்கிறீர்களா..!!!
திமிங்கலத்தின் வாந்தி, அம்பர்கிரிஸ் என்று அழைக்கப்படுகிறது. அவர்கள் அதை மலம் என்று அழைக்கிறார்கள். சிலர் இதனை மலம் என்றும் கூறுகிறார்கள், அதாவது, திமிங்கலத்தின் உடலில் இருந்து வெளியேறும் கழிவுப் பொருட்கள். இது திமிங்கலத்தின் குடலில் இருந்து உருவாகிறது. திமிங்கல, கடலில் பலவற்றை உண்ணும். அவை அனைத்தையும் அதனால் ஜீரணிக்க முடியாது. சிலவற்றை அது வாந்தி எடுத்து விடுகிறது. அப்படி வெளியேற்றப்படும் வாந்திக் கழிவுகள் அம்பர்கிரிஸ்சாக கடலில் மிதக்கின்றன.
ALSO READ | அதிசயம்! இறந்த 45 நிமிடத்திற்கு பின் ‘உயிர்த்தெழுந்த’ பெண்..!!
பின்னர் அவற்றின் மீது சூரிய ஒளி படுவதினாலும், மற்றும் கடலின் உப்பு நீரில் ஊறிகொண்டிருப்பதலாம், கறுப்பு, வெள்ளை மற்றும் சாம்பல் நிற அம்பர்கிரிஸ்சாக உருவாகின்றன. இவற்றை சாதரணமாக நினைக்க வேண்டாம். இவை கிடைத்தால் அது புதையலைப் போன்றது.
திமிங்கலத்தின் அம்பர்கிரிஸ், உலக அளவில் உயர்ரக வாசனைத் திரவியங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருள்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது இது மருந்து பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாலியல் தொடர்பான உடல் பிரச்சனைகளுக்கான மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. சீனாவில் பாலியல் உணர்வை தூண்டும் டானிக்காக ஆம்பர்கிரிஸ் பயன்படுத்தப்படுகிறது. சந்தையில் அதன் விலை கோடிகளில் இருப்பதற்கு இதுவே காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ALSO READ | Viral Video: நடுங்க வைக்கும் வீடியோ; இதயம் பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR