அரசுப் பேருந்தை சிறைப்பிடித்த காட்டுயானைகள் - பயணிகளுக்கு செம ஷாக்: வைரல் வீடியோ
நீலகிரி மஞ்சூரில் இருந்து கெத்தை சென்ற அரசு பேருந்தை காட்டு யானைகள் சிறை பிடித்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. பேருந்தில் பயணித்த பயணிகள் அச்சத்தின் உச்சத்துக்கு சென்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாவட்டம் முழுவதும் உள்ள வனப்பகுதிகள் பச்சை பசேல் என காட்சி அளிக்கிறது. இதனால் கேரளா வனப் பகுதிகளில் இருந்து கூட்டம் கூட்டமாக குட்டிகளுடன் காட்டு யானைகள் நீலகிரி நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில், கேரளா மாநிலம் அட்டப்பாடியையொட்டி உள்ள வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதி எல்லையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் கெத்தை மழைப்பாதையில் நான்கு குட்டிகளுடன் பத்து காட்டு யானைகள் வந்திருக்கின்றன. அவை அப்பகுதியில் முகாமிட்டு உள்ளது.
மேலும் படிக்க | மரத்தின் மேல் விறுவிறுவென்று ஏறி பறவையை பதம் பார்த்த விஷப்பாம்பு: வீடியோ வைரல்
அவ்வாறு முகாமிட்டுள்ள காட்டு யானைகள் அவ்வப்போது மஞ்சூர் , கெத்தை மலைப்பாதையில் உலா வருவது வழக்கம். இந்நிலையில் மஞ்சூரியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தை நான்கு குட்டிகளுடன் இருந்த அந்த காட்டு யானைகள் கூட்டம் திடீரென வழமறித்தது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மஞ்சூர் கோவை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த பரபரப்பு காட்சிகளை பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்துடன் பதிவு செய்து தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வைரலாகி வருகிறது.
காட்டு யானைகள் கூட்டமாக நின்றிருந்ததுடன், பேருந்தை நோக்கியும் சில அடிகள் எடுத்து வைத்தன. இதனால் பேருந்துக்குள் இருந்த பயணிகள் யானைக் கூட்டத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தன. மேலும், ஓட்டுநர் பேருந்துக்குள் இருக்கும் ஒலிப்பெருக்கியில் பாடல்களையும் சத்தமாக ஒலிக்க விட்டார். இருந்தபோதும் யானைகள் அந்தப் பாதையில் இருந்து நகர்ந்து செல்லவில்லை. வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பயணிகள் உள்ளிட்டோரின் முயற்சியால் யானைகள் மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றன.
மேலும் படிக்க | சுற்றி 4 குரங்குகள், கூலா விளையாடும் குட்டிப்பெண்: உருகும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ