சுற்றி 4 குரங்குகள், கூலா விளையாடும் குட்டிப்பெண்: உருகும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

Funny Monkey Girl Video: சமீபத்தில் மிகவும் வித்தியாசமான ஒரு விடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. இதை பார்த்தால் நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 26, 2023, 09:44 AM IST
  • இந்த வீடியோ சமூக ஊடகத் தளமான ட்விட்டரில் @YouthClub_In என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பல இணையவாசிகள் ஷேர் செய்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன.
சுற்றி 4 குரங்குகள், கூலா விளையாடும் குட்டிப்பெண்: உருகும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

குரங்கு வீடியோகளுக்கென இணையத்தில் தனி கிரேஸ் உள்ளது. குரங்குகளின் கோமாளித்தனத்தையும் அவை செய்யும் சேட்டைகளையும் இணையவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள். சமூக ஊடகங்களில் குரங்குகளின் பல குறும்பு வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகின்றன. குரங்குகள் செய்யும் பல வித குறும்புகளை நாம் பல வீடியோக்களில் பார்த்துள்ளோம். 

சில சமயங்களில் இவை சாலையில் செல்பவர்களின் பொருட்களை இழுக்கின்றன, அவர்களில் ஆடைகளை பிடித்து இழுக்கின்றன. சில சமயம் குரங்குகள் மனிதர்களின் தோள்களில் ஏறி ஒய்யாரமாய் சவாரி செய்வதையும் நாம் பார்த்துள்ளோம். ஆனால், சமீபத்தில் மிகவும் வித்தியாசமான ஒரு விடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. இதை பார்த்தால் நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. 

சுற்றுலாத் தலங்கள், மலைகள், கோட்டைகள் போன்ற இடங்களில் அடிக்கடி குரங்குகளைப் பார்க்கிறோம். பொதுவாக குரங்கை பார்த்தால் மக்களுக்கு அச்சம் ஏற்படுவதுண்டு. தொலைவிலிருந்து குரங்கை பார்க்க வேடிக்கையாக இருக்கலாம், ஆனால், அருகில் சென்று பார்க்க அனைவருக்கும் துணிச்சல் வருவதில்லை. குரங்குகளின் நிலையில்லா மனநிலையே இதற்கு காரணமாகும். குரங்குகள் எப்போது என்ன செய்யும் என்று யாராலும் கணிக்க முடியாது. நிலைமை அப்படி இருக்க தற்போது வெளிவந்துள்ள இரு வீடியோவில், ஒரு பெண் குரங்குகளுக்கு மத்தியில் அமர்ந்துகொண்டு படு கூலாக நடந்துகொள்வதை காண முடிகின்றது. 

தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில் குரங்குகளும் பெண் குழந்தையிடம் மிகவும் பசாமாக நடந்துகொள்வதை காண முடிகின்றது. இந்த வீடியோ வைரல் ஆகி வருகின்றது. இது காண்பதற்கு மிக கியூட்டாக உள்ளது. 

வைரலாகி வரும் வீடியோவில், சிறுமி ஒருவர் தனது வீட்டின் அருகே அமர்ந்திருப்பதை காண முடிகின்றது. அவர் அருகில் ​​மூன்று நான்கு குரங்குகள் இருக்கின்றன. சிறுமியின் அருகில் அமர்ந்திருக்கும் குரங்கு அவரது கையை பிடித்து விளையாடத் தொடங்குகிறது. சிறுமி முதலில் குரங்கை செல்லமாக தட்டுகிறார். பின்னர் அவரும் குரங்கின் கையை பிடிக்கிறார்.

மேலும் படிக்க | மரத்தின் மேல் விறுவிறுவென்று ஏறி பறவையை பதம் பார்த்த விஷப்பாம்பு: வீடியோ வைரல்

அதன் பிறகு, சிறுமி குரங்கை நேருக்கு நேர் பார்க்கிறார். குரங்கும் அவரை பார்க்கிறது. குரங்கு சிறுமி மீது இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் வகையில் தன் முகத்தை அவர் முகத்தின் அருகில் கொண்டு சென்று முத்தமிட முயற்சிக்கின்றது. பின்னர் குரங்கு சிறுமியின் தோளை தட்டி ஏதோ புரிய வைகக் முயற்சிக்கிறது. இந்த வகையில் இருவரது விளையாட்டும் தொடர்கிறது. 

அட்டகாசமான சிறுமி-குரங்கு நட்பை இங்கே காணலாம்:

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இத்தனை குரங்குகள் தன்னை சுற்றி இருந்தாலும், சிறுமி சிறிதும் அச்சப்படாமல் அமர்ந்திருக்கிறார். குரங்குகளும் அந்த சிறுமியை ஒன்றும் செய்யாமல் நன்றாக கவனித்துக்கொள்கின்றன. 

இந்த வீடியோ சமூக ஊடகத் தளமான ட்விட்டரில் @YouthClub_In என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பல இணையவாசிகள் ஷேர் செய்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிகக் | குரங்குக்கு கொழுப்ப பாருங்களே.. வாழப்பழத்தை கொடுத்த நபரிடம் எரிச்சல்: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News