பொதுவாக நம் இந்தியாவில் சாலைகளில் வாகனங்களை ஓட்டி செல்வது மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது.  எவ்வளவு கவனமாக வாகனம் ஓட்டுபவராக இருந்தாலும் அதிகளவில் சாலை விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர்.  நாளுக்கு நாள் சாலை விபத்துக்களில் சிக்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றது, பலரும் கவனக்குறைவாக, செல்போன்களில் பேசிக்கொண்டோ அல்லது வேடிக்கை பார்த்துக்கொண்டோ சென்று விபத்துக்களில் சிக்கி சேதமடைகின்றனர்.  இந்த விபத்துக்களில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அடிபடுகிறது என்றால் சாலையில் சாதாரணமாக சென்று கொண்டிருப்பவர்களுக்கும் இவர்களால் விபத்து ஏற்பட்டு விடுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஜடேஜாவைப் போல் துதிக்கையில் வாள் வீசும் குட்டியானை - Viral Video


பல நேரங்களில் மனிதர்களை விட கால்நடைகள் விபத்திற்கு உள்ளாகின்றன, இதுபோன்ற விபத்து வீடியோக்கள் அதிகளவில் இணையத்தில் பகிரப்பட்டு பலரையும் பீதியடைய செய்கிறது, இருப்பினும் கவனக்குறைவால் சாலைகளில் ஏற்படும் விபத்துக்களைகுறைந்தபாடில்லை.  இதுபோன்று கவனக்குறைவாக ஒரு பெண் ஸ்கூட்டர் ஓட்டிகொண்டு வந்து, யானையை லாரியில் இருந்து வெளியேற்றும் போது, ​​அதன் மீது மோதுவது போன்ற ஒரு வீடியோ  வைரலாகி வருகிறது.


கேரளா பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், பெரிய யானை ஒன்று டிரக்கில் இருந்து இறங்கி வந்து சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டு இருக்கிறது.  பொதுவாக, யானைகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இதுபோன்ற லாரிகளில் தான் கொண்டு செல்லப்படும்.  யானை ட்ராக்கில் இருந்து இறங்குவதை பார்க்க அந்த பகுதியில் ஏராளமானோர் கூடி இருந்தனர், அந்த சாலையானது நன்கு அகலமான சாலை, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு அந்த ட்ரக் நிறுத்தப்பட்டு இருந்தது.  அதனையடுத்து சாலையில்  இன்றுகொண்டிருந்த அந்த யானையின் மீது ஒரு பாகனும், யானையின் அருகில் மற்றொரு பாகனும் நின்று கொண்டிருந்தனர்.  அப்போது அந்த வழியாக ஸ்கூட்டியில் வந்த பெண் ஒருவர் வேகமாக யானையின் அருகில் நின்ற அந்த பாகனை ஒரே நொடியில் வேகமாக வண்டியில் இடித்து முட்டி தூக்கி எறிந்தவர், நேராக யானையின் மீது வண்டியை மோதினார்.  இந்த சம்பவத்தால் பயந்துபோன அந்த யானை பயந்துகொண்டு அந்த இடத்தை விட்டு வேகமாக ஓட ஆரம்பித்தது.   


 



யானை ஓடுவதை கண்டு பயந்த மக்களும் அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர், அதிர்ஷடவசமாக யானையால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை அது சாலையில் நேராகவே ஓடியது.  கேரளா பகுதியில் யானை துரத்தி மக்களை கொன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால் மக்கள் சிறிது நேரம் அஞ்சினர், அந்த இடமே இந்த சம்பவத்தால் சிறிது நேரத்திற்கு கலவரமாக மாறியது.  இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க | குரங்கு விரித்த வலையில் சிக்கிய புலி; வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது இது தானோ..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR