புதுடெல்லி: மனிதர்களுக்குள் சண்டை வருவது வழக்கமாக நடக்கும் விஷயம்தான். கோவத்தில் நாம் மற்றவர்களை கண்டபடி பேசி விடுகிறோம். சில சமயம் சிலருக்கு கோவம் அளவைக் கடந்து அது கைகலப்பில் கூட முடிகிறது. இவை எல்லாம் விரோதத்தால் நடக்கும் வன்முறை. ஆனால், சண்டைக்குப் பிறகு ஒருவரை ஒருவர் முத்தம் கொடுத்ததை நீங்கள் பார்த்துள்ளீர்களா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது போன்ற ஒரு ஆச்சரியமான விஷயம் ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பர்க்கில் நிகழ்ந்துள்ளது. இந்த வினோதமான முத்தத்தின் கதையை இங்கே காணலாம்.


இந்த சண்டை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது


எடின்பர்க்கில் 2019 ஆம் ஆண்டு இந்த வினோதமான சண்டை நடந்தது. நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணை காரணமாக, இது தலைப்புச் செய்திகளில் வந்து தற்போது வைரல் (Viral) ஆகி விட்டது. சாலையில் சென்று கொண்டிருந்த ஜேம்ஸ் மெகன்சிக்கும் (James Mckenzie) 27 வயதான பெத்தனி ரியானுக்கும் (Bethany Ryan) ஏதோ ஒரு விஷயத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.


சிறப்பு என்னவென்றால், இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாதவர்கள். இந்த சண்டையின்போது திடீரென ஜேம்ஸின் அருகில் வந்த பெதனி அவரது உதட்டில் முத்தமிட ஆரம்பித்தார். இந்த முத்தத்தின் காரணமாக வாழ்நாள் முழுவதுக்கும் ஜேம்ஸ் ஊமையாகிவிட்டார். ஆம்!! ஜேம்ஸை முத்தமிடும்போது பெத்தனி அவரது நாக்கை (Tongue) தனது பற்களுக்கு இடையில் வைத்து கடித்து விட்டார்.


ALSO READ: ஆன்லைனில் உணவு ஆடர் செய்தவருக்கு குப்பியில் சிறுநீரை நிறப்பி கொடுத்த அவலம்!


ஜேம்ஸ் நிரந்தரமாக ஊமையாகிவிட்டார்


பெத்தனி நாக்கை மிக வேகமாக கடித்ததால், ஜேம்சின் நாக்கு வெட்டப்பட்டது. வெட்டப்பட்ட நாக்கை அவர் சாலையிலேயே துப்பினார். அப்போது அருகிலேயே சுற்றிக்கொண்டிருந்த சீகல் (பறவை) ஜேம்ஸின் நாக்குடன் பறந்து சென்றது. நாக்கு வெட்டப்பட்டதால், ஜேம்ஸின் நிலை மோசமடைந்தது. உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருந்தது. இருப்பினும், வெட்டப்பட்ட நாக்கு இல்லாததால் ஜேம்ஸுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை. அவர் நிரந்தரமாக ஊமையாகிவிட்டார்.


வழக்கு விசாரணையில் உள்ளது


அவரது உடல்நிலை மேம்பட்டவுடன், ஜேம்ஸ் பெத்தனிக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார். டெய்லி மெயிலின் செய்தியின்படி, இந்த வழக்கின் விசாரணை எடின்பர்க் ஷெரிப் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சண்டையின்போது ஜேம்ஸ் முதலில் அடிக்க வந்ததாக பெத்தனி நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதன் பிறகே தான் இப்படி செய்ததாக பெத்தனி கூறினார்.


அதே நேரத்தில், இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது என்றும் அது முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.


ALSO READ: திருமண பரிசாக LPG சிலிண்டர், பெட்ரோல், வெங்காயம் வழங்கிய நண்பர்கள்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR