கிங்ஸ் லெவனின் வெற்றிக்கு பறக்கும் முத்தம் கொடுத்து உற்சாகப்படுத்தும் ப்ரீதி ஜிந்தா

IPL  2020 போட்டித்தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் நடிகை பிரீத்தி ஜிந்தா கொடுத்த முத்தம், பறந்து வந்து இணையத்தை சூடேற்றி இருக்கிறது.\

Written by - ZEE Bureau | Edited by - ZEE Bureau | Last Updated : Oct 26, 2020, 03:20 PM IST
  • கிங்ஸ் லெவன் பஞ்சாபின் வெற்றிக்குப் பிறகு, அணியின் உரிமையாளரும் பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா, ட்விட்டரில் தங்கள் அணியின் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
  • ஐபிஎல் 2020 இன் தொடக்கத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி (KXIP) அதிக வெற்றியைப் பெறவில்லை
  • ஆனால் இந்த அணி தொடர்ச்சியாக 4 வெற்றிகளைப் பெற்ற விதம் மதிப்புக்குரியது.
கிங்ஸ் லெவனின் வெற்றிக்கு பறக்கும் முத்தம் கொடுத்து உற்சாகப்படுத்தும் ப்ரீதி ஜிந்தா

புதுடெல்லி: ஐபிஎல் 2020 இன் தொடக்கத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி (KXIP) அதிக வெற்றியைப் பெறவில்லை, ஆனால் இந்த அணி தொடர்ச்சியாக 4 வெற்றிகளைப் பெற்ற விதம் மதிப்புக்குரியது. சனிக்கிழமையன்று நடைபெற்ற, பரபரப்பான போட்டியில் பஞ்சாப் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து புள்ளி அட்டவணையில் 5 வது இடத்தைப் பிடித்தது.

இந்த வெற்றிக்கு பின்னர், பஞ்சாப் அணியின் வீரர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர், அதே நேரத்தில் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தாவின் மகிழ்ச்சியும் உச்சத்துக்கு சென்றுவிட்டது. போட்டியில் தனது அணி வென்ற பிறகு, மைதானத்தை நோக்கி திரும்பிய ப்ரீத்தி FlyingKiss கொடுத்து முத்தத்தை மட்டுமல்ல, ரசிகர்களின் உற்சாகத்தையும் பறக்கவிட்டார். ப்ரீதி ஜிந்தாவின் இந்த ஸ்டைலை அவரது ரசிகர்கள் மிகவும் விரும்புகிறார்கள்.

IPL  2020 போட்டித்தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் நடிகை பிரீத்தி ஜிந்தா கொடுத்த முத்தம், பறந்து வந்து இணையத்தை சூடேற்றி இருக்கிறது.

கிங்ஸ் லெவன் பஞ்சாபின் வெற்றிக்குப் பிறகு, அணியின் உரிமையாளரும் பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா, ட்விட்டரில் தங்கள் அணியின் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.  

தனது அணியின் வெற்றி குறித்து ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்த ப்ரீத்தி, 'நான் இன்று தூங்க முடியாது. மிகவும் உற்சாகமாக இருக்கிறேன், நமது பஞ்சாப் வென்றது. நாங்கள் எங்களுடைய ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்க மாட்டோம் என்று நம்புகிறேன். இன்று வரை நாம் ஒரு பாடம் பெற்றுள்ளோம், இறுதிவரை நாம் கைவிடக்கூடாது, போட்டியின் இறுதி வரை கடும் முயற்சியை தொடர வேண்டும்” என்று எழுதியுள்ளார்.

பிரீத்தி தனது அணியின் பந்து வீச்சாளர்களான கிறிஸ் ஜோர்டான், முகமது ஷமி, அர்ஷதீப் சிங், ரவி பிஷ்னோய், அஸ்வின் முருகன் மற்றும் மந்தீப் சிங் ஆகியோருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். கேப்டன் கே.எல்.ராகுலையும் பிரீத்தி பாராட்டியுள்ளார்.

பிரீத்தி ஜிந்தாவின் ரசிகர்களும் அவருடன் சேர்ந்து மகிழ்ச்சியில் குதிக்கின்றனர். இந்த வெற்றிக்கு ரசிகர்கள் ட்விட்டரில் பிரீதியை வாழ்த்தி, வெவ்வேறு வழிகளில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அதில் சில சுவாரஸ்யமான ட்வீட்டர் செய்திகளைப் பார்ப்போம். 

More Stories

Trending News