வாடிக்கையாளருக்கு அனுப்பப்பட்ட உணவு வகைகளில், ‘கோக்கோ கோலா’ பாட்டிலில் சிறுநீர் நிரப்பி அனுப்பியதற்காக, ‘ஹலோ பிரஷ்’ நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.!
இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகளாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் (Social Media) மூலம் நம்மிடம் வந்து சேர்கிறது. அந்தவகையில், வாடிக்கையாளருக்கு அனுப்பப்பட்ட உணவு வகைகளில், ‘கோக்கோ கோலா’ பாட்டிலில் சிறுநீர் (urine) நிரப்பி அனுப்பியதற்காக, ‘HelloFresh’ நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வருபவர் ஆலிவர் மெக்மான்ஸ். இவர் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் பிரபல நிறுவனமாக ‘HelloFresh’ வாயிலாக உணவு ஆர்டர் செய்திருந்தார். அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த உணவுடன், கோகோ கோலா பாட்டில் (soft-drink bottle) ஒன்றும் இருந்திருக்கிறது. ஆனால், அதில் கோக்குக்கு பதிலாக, முழுவதும் சிறுநீர் இருந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர், ‘HelloFresh’ நிறுவனத்துக்கு தக்க பாடம் புகட்ட எண்ணினார்.
We truly lack the words to describe how sorry we are because of this. Could you please send us a DM so we could deal with this as soon as possible?
-Harry— HelloFresh UK (@HelloFreshUK) February 21, 2021
சிறுநீர் நிரப்பப்பட்டிருந்த கோலா பாட்டிலை புகைப்படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஆலிவர், ‘HelloFresh’ நிறுவனத்தை டேக் செய்து, அதன் சேவையை கடுமையாக விமர்சித்திருந்தார். இதனையடுத்து அந்நிறுவனம் தனது பிழைக்காக மன்னிப்பு கேட்டிருக்கிறது.
ALSO READ | என்னுடைய கர்ப்பத்திற்கு காற்று தான் காரணம்; கர்ப்பமான 15 நிமிடதில் பிறந்த குழந்தை!!
இதுகுறித்து ‘HelloFresh’ நிறுவன செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘வாடிக்கையாளரை புண்படுத்தியதற்காக உண்மையில் நாங்கள் வருந்துகிறோம். உணவு டெலிவரி செய்யும் Box முழுவதும் சீல் செய்யப்பட்டிருந்த போதும், அந்த பாட்டிலில் சிறுநீர் எப்படி வந்தது என நாங்கள் விசாரித்து கொண்டிருக்கிறோம். ஆலிவரிடம் நேரடியாக நாங்கள் மன்னிப்பு கேட்டிருக்கிறோம். இதுபோன்ற தவறு மீண்டும் நடக்காது என்பதை உறுதியாக தெரிவிக்கிறோம்’ என்றார்.
2011-யில் துவங்கப்பட்ட ‘HelloFresh’ நிறுவனம், ஜேமி ஆலிவர் மற்றும் ஜெசிகா ஆல்பா உள்ளிட்ட பிரபலங்களில் விருப்ப தேர்வாக இருக்கிறது. 12 நாடுகளில் தனது கிளைகளை கொண்டிருக்கும் இந்த நிறுவனம், உலகின் மிகப்பெரிய ‘Food Kit’ நிறுவனங்களில் ஒன்றாகும். அமெரிக்காவிலும் இது பிரபலமாக உள்ளது.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR