வைரல் வீடியோ: சமீபகாலமாக, வயதானவர்கள் உற்சாகமாக நடனமாடும் பல வைரல் வீடியோக்கள் பரவலாக பார்க்கப்படுகிறது. இது, வயது என்பது வெறும் எண் மட்டுமே, மனதிலோ, உடலிலோ, உற்சாகத்திலோ இல்லை என்பதை நிரூபித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

63 வயதான ரவி பாலா ஷர்மா பிரபல பாடலுக்கு அற்புதமாக நடனமாடும் வீடியோ வெளியாகி வைரலாகிறது. இந்த மூதாட்டி இதற்கு முன்னரும் பல நடன வீடியோக்களை வெளியிட்டுள்ளார். ட்ராக் பேண்ட் மற்றும் டாப் அணிந்திருக்கும் 63 வயது ரவி பாலா ஷர்மா, பெப்பி பாடலுக்கு அழகாக நடனமாடுகிறார்.  


வீடியோவை இங்கே பாருங்கள்:




ரவி பாலா ஷர்மாவின் உற்சாகமான நடனத்தை மக்கள் விரும்பிப் பார்ப்பதுடன், சமூக ஊடகங்களில் (Social Media) பாராட்டு மழையையும் பொழிகின்றனர்.  "உங்களிடம் உள்ள மகிழ்ச்சியான குழந்தைத்தனமான சந்தோசம் மற்றவர்களையும் தொற்றிக் கொள்ளும்" என்று ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.


63 வயது மூதாட்டியின் நடனத்தைப் பார்த்து ரசிக்கும் மற்றொருவர், "அற்புதமான நடனம் மனதை கொள்ளைக் கொள்கிறது" என்று கருத்து தெரிவித்தார். மூன்றாவதாக, மற்றொருவரோ "அற்புதம்! உங்கள் ஆற்றலை விரும்புகிறேன்" என்றார். இதைத்தவிர, கருத்துகள் பகுதியில், எமோஜிகள் மற்றும் ‘வாவ்’, ‘அழகு’ ‘அருமை’ என பலரும் பலவிதமான வார்த்தைகளால் சொன்னாலும், அனைத்தும் பாராட்டும் கருத்துக்களாகவே இருக்கின்றன.



சில நாட்களுக்கு முன்பு, ஏ தில் ஹை முஷ்கில் என்ற இந்தி திரைப்படத்தின் ரன்பீர் கபூர் மற்றும் அனுஷ்கா ஷர்மாவின் ‘தி பிரேக்அப் சாங்’ என்ற பிரபல பாடலுக்கு நட்னமாடியபோது ரவி பாலா ஷர்மா வைரலானார்.


கொரோனா தொற்றுக்காலத்தில், நாட்டில் லாக்டவுன் (Corona Lockdown) அமலில் இருந்தபோது இன்ஸ்டாகிராமில் தனது முதல் வீடியோவை வெளியிட்டார் ரவி பாலா ஷர்மா என்ற இந்த வயதான ஆனால், சூப்பர் நடனபெண்மணி. அந்த வீடியோவில், இந்திய பாரம்பரிய இசைக்கு அழகாக நடனமாடி பாராட்டுக்களை அள்ளிக் குவித்தார். 


அப்போதிருந்து, அவர் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் தனது நடனம் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். டான்சிங் பாட்டி என்று அழைக்கப்படும் ரவி பாலா சர்மாவை இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்து 54 ஆயிரம் பேர் (154K) பின்தொடர்கின்றனர்!  


READ ALSO | பைப்புல தண்ணி வருமா? இங்க பணமே வரும்!! அதிகாரிகளை அசர வைத்த தகிடுதத்தம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR