சகிப்புத் தன்மை வேண்டும் என பாடம் எடுக்கும் Zomato மீண்டும் அகம்பாவ பேச்சு
இந்த விவகாரத்தில் சகிப்புத்தன்மை குறித்து தமிழர்களுக்கு பாடம் எடுக்க முயல்வதெல்லாம் மிகவும் தவறு. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சோமேட்டோ தலைமை நிர்வாக அதிகாரி தீபீந்தர் கோயல்.
Zomato இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் உணவு விநியோக சேவை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்தியா உட்பட 23 நாடுகளில் Zomato செயல்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் Zomato பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஷ் என்ற இளைஞர் நேற்று சோமாடோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவர் ஆர்டர் செய்யப்பட்ட உணவு முழுமையாக டெலிவரி செய்யப்படாததால், அவர் Zomato வாடிக்கையாளர் பராமரிப்பு சேவை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். மேலும் பணத்தை திரும்ப அளிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். ஆனால் சோமாடோவின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசிய ஊழியர், பணத்தை திரும்ப கொடுக்க மறுத்துவிட்டார். மேலும் அவர் இந்தியில் பேசியுள்ளார்.
இதனையடுத்து விகாஷ் ட்வீட் செய்து, "சோமாட்டோவில் ஆர்டர் செய்த உணவு முழுமையாக கிடைக்கவில்லை. என்னுடைய தொகையை திருப்பி கேட்டததால், எனக்கு இந்தி தெரியாததால் பணத்தை திருப்பித் தர முடியாது என்று கூறுகிறது. மேலும் நான் ஒரு இந்தியனாக இருப்பதால், எனக்கு ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று ஊழியர் பாடம் எடுக்கிறார். அவருக்கு தமிழ் தெரியாது. நீங்கள் ஒரு வாடிக்கையாளருடன் பேசும் முறை அல்ல என @zomato மற்றும் @zomatocare டேக் செய்து கூறியுள்ளார்.
அதற்கு பதில் அளித்த சோமாட்டோ தரப்பில், "நாங்கள் உணவு நிறுவனத்திடம் பேசினோம், அத்தகைய தகவல் ஏதும் வரவில்லை, நாங்கள் டெலிவரி பாயிண்டிலும் பேசினோம்" என்று சோமாடோ வாடிக்கையாளர் பராமரிப்பு அதிகாரி கூறினார். இந்தி மொழி குறித்த அந்த அதிகாரியும் பாடம் எடுத்தார்.
ALSO READ | இந்தி தெரிந்திருக்க வேண்டும்; குவியும் எதிர்ப்புகள்; தலைகுனிந்த சொமேட்டோ
மீண்டும் ட்வீட் செய்த விகாஸ், "என்னை பொய்யர் என்று சொன்ன மற்றும் எந்த அடிப்படைக் காரணமும் இல்லாமல் "இந்தி" கற்கச் சொன்ன சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து எனக்கு தெளிவான விளக்கம் மற்றும் பகிரங்க மன்னிப்பு தேவை" எனக் கூறினார்.
சொமாட்டோ அதிகாரி விகாஸிடம் மொழி காரணமாக உணவு தொடர்பான சரியான விவரங்களை தன்னால் கூற முடியவில்லை என்றும் கூறினார்.
அதற்கு விகாஸ் நீங்கள் தமிழ்நாட்டில் சேவை செய்தால், தமிழ் தெரிந்தவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அதன்பிறகு பதில் அளித்த வாடிக்கையாளர் பராமரிப்பு சேவை ஊழியர், விகாஸிடம் இந்தி நமது தேசிய மொழி என்று கூறியதோடு, அனைவருக்கும் ஹிந்தி கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும். அது இயல்பானது எனக் கூறியுள்ளார்.
இந்த சர்ச்சைக்கு பிறகு, #Reject_Zomato என்ற டேக் தற்போது இணையம் முழுவதும் ட்ரெண்டிங்கில் உள்ளது.
Zomato-வின் சர்ச்சைக்குப் பிறகு உணவை ஆர்டர் செய்ததற்காக விகாஸ் மற்றும் தமிழக மக்களிடம் சோமாடோ மன்னிப்பு கோரியுள்ளது. சோமாடோ ட்விட்டரில், "வணக்கம் விகாஷ், எங்கள் வாடிக்கையாளர் பராமரிப்பு முகவரின் நடத்தைக்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். அடுத்த முறை உங்களுக்கு சிறப்பாக சேவை செய்ய நீங்கள் எங்களுக்கு வாய்ப்பு தருவீர்கள் என்று நம்புகிறோம்" எனக்கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ALSO READ | Viral Post: தமிழ் தெரியாத Zomato, இந்தி தெரியாதா என திமிர் பேச்சு
Zomato தரப்பில் இருந்து உண்மையை உணர்ந்து மன்னிப்பு கேட்டதால், தமிழக மக்கள் அமைதியாக திரும்பும் நேரத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சோமேட்டோ தலைமை நிர்வாக அதிகாரி தீபீந்தர் கோயல் தனது டிவிட்டில், "ஒருவர் அறியாமல் செய்த தவறு தேசிய பிரச்னையாக மாறியிருக்கிறது. நாட்டின் சகிப்புத்தன்மை என்பது தற்போது இருப்பதைவிட அதிகரிக்க வேண்டும் என சோமேட்டோ நிறுவனர் கூறியுள்ளார். இதில் யாரை குறைக்கூறுவது? எனக் கேள்வி எழுப்பிய அவர், அந்த பணியாளரை நாங்கள் மீண்டும் பணியில் அமர்த்துவோம். இந்த ஒரு காரணத்திற்காக அவரை பணியிலிருந்து நீக்குவது ஏற்புடையதல்ல. இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேறிச் செல்ல அவருக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.
எங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணிபுரிபவர்கள் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்போதுதான் அவர்கள் கற்றலின் தொடக்கத்தில் இருந்து வேலையை தொடங்கியிருக்கிறார்கள். பிராந்திய மக்களின் உணர்வுகளையும், மொழியின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ளும் அளவிற்கு அவர்கள் யாரும் நிபுணர்கள் அல்ல. நானும் கூட தான்.
நாம் அனைவரும் ஒருக்கொருவர் மற்றவர்களின் குறைபாடுகளை பொறுத்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களுடைய மொழி மற்றும் பிராந்திய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டை நாங்கள் நேசிக்கிறோம். நாட்டின் மற்ற பகுதிகளை நேசிப்பதைபோல உங்களையும் நேசிக்கிறோம். கூடுதலாகவோ, குறைவாகவோ அல்ல. நாம் வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்கிறோம் என்று தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.
ALSO READ | லடாக் விவகாரத்தில் வலுக்கும் போராட்டம்; Zomato சீருடையை கிழித்தெறியும் ஊழியர்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR