இந்தி தெரிந்திருக்க வேண்டும்; குவியும் எதிர்ப்புகள்; தலைகுனிந்த சொமேட்டோ

பலரும் சொமேட்டோவின் இந்த நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Written by - ZEE Bureau | Last Updated : Oct 19, 2021, 12:05 PM IST
இந்தி தெரிந்திருக்க வேண்டும்; குவியும் எதிர்ப்புகள்; தலைகுனிந்த சொமேட்டோ

இந்தியாவில் வேகமாக வளரும் உணவு டெலிவரி சேவை நிறுவனங்களில் ஒன்று சொமேட்டோ நிறுவனம் ஆகும். சொமேட்டோ இந்தியா உள்ளிட்ட 23 நாடுகளில் இயங்குகிறது. உணவகங்களைப் பற்றிய விவரங்களையும், அவற்றின் படங்களையும், வாடிக்கையாளர் மதிப்பீட்டையும் இத்தளத்தில் பார்க்க முடியும்.

சமீப காலமாக சொமேட்டோ (Zomato) நிர்வாகம் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அதன்படி தமிழகத்தை சேர்ந்த விகாஷ் என்பவர் ட்வீட் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்தேன். அதில், நான் ஆர்டர் செய்த உணவு முழுமையாக இல்லாமல் இருந்தது. இதனால் இந்த விவகாரம் குறித்து சொமேட்டோ கஸ்டமர் கேரைத் தொடர்பு கொண்டது பணம் திரும்பக் கிடைக்காது. உங்களால் ஹிந்தியில் பிரச்னையை விளக்கமுடியவில்லை. ஒரு இந்தியராக இருந்துகொண்டு இந்தியாவின் தேசிய மொழியான இந்தி தெரியாமல் எப்படி இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளது. இதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ள விகாஷ், கஷ்டமர் கேர் உடனான ஸ்கிரீன்ஷாட்டையும் அத்துடன் பதிவிட்டு இருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் சமூக வலைதளங்களில் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.

ALSO READ | Viral Post: தமிழ் தெரியாத Zomato, இந்தி தெரியாதா என திமிர் பேச்சு

 

இந்நிலையில் தற்போது பலரும் சொமேட்டோவின் இந்த நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சொமோட்டோ நிறுவனம் தமிழில் மனிப்பு கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், " வணக்கம்‌ தமிழ்நாடு! ....எங்கள்‌ வாடிக்கையாளர்‌ சேவை முகவரின்‌ நடத்தைக்கு வருந்துகிறோம்‌. வேற்றுமையில்‌ ஒற்றுமை என்ற நம்‌ தேசத்தின்‌ மாறுபட்ட கலாச்சாரத்தின்‌ மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம்‌ காட்டிய ஊழியரை பணிநீக்கம்‌ செய்துள்ளோம்‌. பணிநீக்கம்‌ என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம்‌. மேலும்‌ மக்களின்‌ உணர்வுகளுக்கு எதிராக கருத்தைப்‌ பகிரக்கூடாது எனத்‌ தெளிவாக நாங்கள்‌ எங்கள்‌ முகவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம்‌.

இந்த வாடிக்கையாளர்‌ சேவை முகவரின்‌ அறிக்கைகள்‌ மொழி அல்லது சகிப்புத்தன்மை குறித்த நிறுவனத்தின்‌ நிலைப்பாட்டைக்‌ குறிக்கவில்லை. ஒரு நிறுவனமாக, நாங்கள்‌ முழு பயன்பாட்டிற்காக தமிழ்‌ செயலியை உருவாக்குகிறோம்‌. நாங்கள்‌ ஏற்கெனவே மாநிலத்திற்கான தமிழில்‌ சந்தைப்படுத்தல்‌ முயற்சிகளை உள்ளூர் மயமாக்கியுள்ளோம்‌. 

 

 

எ.கா. நாங்கள்‌ மாநிலத்திற்கான உள்ளூர்‌ பிராண்ட்‌ அம்பாசிடராக அனிருத்தை தேர்வு செய்துள்ளோம்‌. மேலும்‌ கோயம்புத்தூரில்‌ ஒரு உள்ளூர்‌ தமிழர்‌ கால்‌ சென்ட்டர்‌ / சர்வீஸ்‌ சென்ட்டரை உருவாக்கும்‌ பணியில்‌ உள்ளோம்‌. உணவு மற்றும்‌ மொழி ஒவ்வொரு மாநிலத்தின்‌, கலாச்சாரத்தின்‌ இரண்டு அடித்தளங்கள்‌ என்பதை நாங்கள்‌ புரிந்துள்ளோம்‌. அவை இரண்டையும்‌ நாங்கள்‌ முழுமையாக உணர்ந்துள்ளோம்‌ என மீண்டும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌" என்று தெரிவித்துள்ளது.

ALSO READ | வீடு தேடி வரும் மதுபானம்... இனி Amazon மற்றும் BigBasket பயன்பாட்டிலும்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News