இந்தியாவில் வேகமாக வளரும் உணவு டெலிவரி சேவை நிறுவனங்களில் ஒன்று சொமேட்டோ நிறுவனம் ஆகும். சொமேட்டோ இந்தியா உள்ளிட்ட 23 நாடுகளில் இயங்குகிறது. உணவகங்களைப் பற்றிய விவரங்களையும், அவற்றின் படங்களையும், வாடிக்கையாளர் மதிப்பீட்டையும் இத்தளத்தில் பார்க்க முடியும்.
சமீப காலமாக சொமேட்டோ (Zomato) நிர்வாகம் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. முன்னதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த சொமேட்டோ டெலிவரி பாய், நுகர்வோருக்கு வழங்க வேண்டிய உணவை எடுத்துச் சாப்பிட்டார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் வைரலானதுடன் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ALSO READ | ஹோட்டல்களுக்கு Takeaway Service இலவசமாக கொடுத்து அசத்தும் Zomato
அதேபோல் சென்ற ஆண்டு, பெங்களூருவில் உணவு வழங்கும்போது பெண் நுகர்வோரைத் தாக்கியதாக சொமேட்டோ ஊழியர் மீது புகார் அளிக்கப்பட்டது. பின்னர் அந்த சொமேட்டோ ஊழியர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், அந்தப் பெண்ணின் சொமேட்டோ ஊழியர் மிக மோசமாக நடந்துகொண்டது தெரியவந்தது. அதன்படி சொமேட்டோ நிர்வாகம் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த விகாஷ் என்பவர் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்தேன். அதில், நான் ஆர்டர் செய்த உணவு முழுமையாக இல்லாமல் இருந்தது. இதனால் இந்த விவகாரம் குறித்து சொமேட்டோ கஸ்டமர் கேரைத் தொடர்பு கொண்டது பணம் திரும்பக் கிடைக்காது. உங்களால் ஹிந்தியில் பிரச்னையை விளக்கமுடியவில்லை. ஒரு இந்தியராக இருந்துகொண்டு இந்தியாவின் தேசிய மொழியான இந்தி தெரியாமல் எப்படி இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளது. இதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ள விகாஷ், கஷ்டமர் கேர் உடனான ஸ்கிரீன்ஷாட்டையும் அத்துடன் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
Ordered food in zomato and an item was missed. Customer care says amount can't be refunded as I didn't know Hindi. Also takes lesson that being an Indian I should know Hindi. Tagged me a liar as he didn't know Tamil. @zomato not the way you talk to a customer. @zomatocare pic.twitter.com/gJ04DNKM7w
— Vikash (@Vikash67456607) October 18, 2021
தற்போது இந்த சம்பவம் தொடர்பாக தருமபுரி எம்.பி செந்தில்குமார் கேள்வி ஒன்றை ட்விட்டரில் எழுப்பி உள்ளார். அதில்., எப்போதிலிருந்து ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழியானது, தமிழ்நாட்டில் உள்ள வாடிக்கையாளர் ஏன் ஹிந்தியை கற்றுக்கொள்ள வேண்டும், எந்த அடிப்படையில் உங்கள் வாடிக்கையாளருக்கு குறைந்தபட்சம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்குகிறீர்கள். உங்கள் நுகர்வோரின் பிரச்னையைத் தீர்த்துவையுங்கள். மன்னிப்பு கோருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
Team @zomato @zomatocare from when did Hindi become a National language.
Why should the customer in Tamil Nadu know hindi and on what grounds did you advise your customer that he should atleast know a little of Hindi.
Kindly address your customer's problem and apologize. https://t.co/KLYW7kRVXT
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) October 18, 2021
ALSO READ | வீடு தேடி வரும் மதுபானம்... இனி Amazon மற்றும் BigBasket பயன்பாட்டிலும்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR