தமிழகம் மற்றும் கேரளாவில் இயங்கிவரும் தெற்கு ரயில்வே பள்ளிகளை வரும் கல்வியாண்டு முதல் மூட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது!
 
ரயில்வே ஊழியர்களின் குழந்தைகள் படிக்கும் வகையில் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான ரயில்வே பள்ளிகள் இயங்கி வருகின்றன. அந்தவகையில் தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் தமிழகம் மற்றும் கேரளாவில் மொத்தம் 9 ரயில்வே பள்ளிகள் இயங்கி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த 9 பள்ளிகளில் கிட்டத்தட்ட 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். சுமார் 250 ஆசிரியர்களும், 200 அலுவலக ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.


இந்நிலையில் தெற்கு ரயில்வே கீழ் இயக்கும் பள்ளிகளை வரும் கல்வியாண்டு முதல் மூட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


சமீபத்தில் ரயில்வே துறையில் மாற்றங்களைக் கொண்டு வர விவேக் தேப்ராய் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி, ரயில்வே துறையின் நிர்வாகத்தில் இருந்து பள்ளி மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தைத் தனியாக பிரிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு பரிந்துரைகளை அளித்தது. இந்த பரிந்துரையில் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த பரிந்துரையின்படி தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள ரயில்வே பள்ளிகளில் புதிய மாணவர்களை சேர்க்க வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும். தற்போது ரயில்வே பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களையும் வேறு பள்ளியில் சேர்க்குமாறும் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.


இந்த முடிவிற்கு ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தி எழுந்துள்ளது.