SpecialStatusRow: டெல்லி புறப்படுகிறார் சந்திரபாபு நாயுடு!
ஆந்திரா சிறப்பு அந்தஸ்து விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் டெல்லி புறப்படுகிறார் முதல்வர் சந்திரபாபு நாயுடு!
ஆந்திரா சிறப்பு அந்தஸ்து விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் டெல்லி புறப்படுகிறார் முதல்வர் சந்திரபாபு நாயுடு!
டெல்லி செல்லும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் சத்தித்து ஆந்திரா சிறுப்பு அந்தஸ்த்து விவகாரம் தொடர்பாக பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆந்திரா-விற்கு சிறப்பு அந்தஸ்து வழங்வது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஆந்திர மாநில அரசியல் கட்சிகளுக்கும் இடையே கடும் மோதல் நடைப்பெற்று வருகிறது. இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தெலங்கு தேசம்கட்சி, கூட்டணியில் இருந்து வெளியேறியது.
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரவும் ஆந்திர கட்சிகள் முடிவு செய்தது. இதனையடுத்து மத்திய அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் ஆந்திர மாநில MP-க்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக அவை நடவடிக்கையை முடங்கிய நிலையில் உள்ளது.
இந்நிலையில் ஆந்திரா-விற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குதல் விவகாரம் தொடர்பாக YSR காங்கிரஸ் MP-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின. மேலும் பாராளுமன்ற கூட்டத்தின் கடைசி நாள் அன்று அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறப்பு அந்தஸ்து தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பங்கேற் YSRCP மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் தற்போது வெளியான தகவலின் படி வரும் வாரம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் டெல்லி சென்று அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் சத்தித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!