பெங்களூரு விமான நிலையத்தில் மோதிய ஸ்பைஸ் ஜெட்: பயணிகள் அதிர்ச்சி!
பெங்களூரு விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் என்ற விமானம் ஒன்று ஓடுபாதையில் உள்ள மின் விளக்குகளில் மீது மோதிக் கொண்டதில் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் என்ற விமானம் ஒன்று ஓடுபாதையில் உள்ள மின் விளக்குகளில் மீது மோதிக் கொண்டதில் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் என்ற விமானம் ஒன்று ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்தது அப்போது ஓடுபாதையில் உள்ள மின் விளக்குகளில் மீது நேற்று இரவு எதிர்பாரத விதமாக மோதிக் கொண்டதில் 4 மின் விளக்குகள் சேதமடைந்துள்ளனர்.
இதனால், அப்பகுதில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயனாளிகளுக்கு எந்த வித காயமோ, உயிர் சேதமோ யாருக்கும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக விசாரணையில் கூறும் போது:- ஸ்பைஸ் ஜெட் விமானம் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்தது. பின்னர் ஓடுபாதையில் செல்ல முயற்சிக்கும் போது மழைக்காரணமாக மின் விளக்குகளில் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும், தனியார் விமான சேவை நிறுவனமான Jet Airways ஆனது உள்ளூர் விமான சேவைகளை அதிகப்படுத்தும் விதமாக 144 புது விமான சேவைகளை (வாராந்திர) சேவையினை துவங்கவுள்ளது.
இதுகுறித்து Jet Airways வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது... உள்ளூர் விமான சேவையினை அதிகரிக்கும் விதமாக நிறுத்தம் இல்லா நேரடி விமான சேவை, ஒரு நிறுத்த விமான சேவையென இந்திய நகரங்களை இணைக்கும் விதமாக புதிதாக 144 வாராந்திர விமான சேவைகள் துவங்கப்படவுள்ளது என தெரிவித்துள்ளது.
இதன்மூலம் வடகிழக்கு மாகானங்களின் போக்குவரத்தினை பலப்படுத்த இயலும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி வாரத்திற்கு 3 முறை இம்பால் - டெல்லி, வாரத்திற்கு 4 முறை பாட்னா- ராய்பூர் வழித்தடத்திலும் விமான சேவைகள் இயக்கப்படவுள்ளது.
இந்நிலையில், பெங்களூரு விமான நிலையத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது குறிபிடத்தக்கது.