ஆயுத பூஜை கொண்டாட்டம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் ஆயுத பூஜை, அக்டோபர் 4 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. நவராத்தியின் 9ஆம் நாளான நவம திதியில் வழக்கம்போல் ஆயுத பூஜை வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் அக்டோபர் 3 ஆம் தேதி மாலை 4.38 மணிக்கு நவம திதி தொடங்கிவிட்டது. இன்று பிற்பகல் 2.21 மணி வரை இந்த திதி நேரம் இருக்கிறது. பூஜை முகூர்த்த நேரம் பிற்பகல் 1.57 மணிக்கு தொடங்கி 2.45 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் ஆயுத பூஜை செய்து வழிபாடு நடத்தலாம்.  


ஆயுத பூஜை கொண்டாடும் முறை


ஆயுத பூஜை தினத்தில் தொழிலுக்கு தேவையான உபகரணங்கள், வாகனம் மற்றும் இல்லங்களில் இருக்கும் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்களை வைத்து வழிபாடு நடத்த வேண்டும். அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்து மஞ்சள் குங்கும் கொண்டு பொட்டு வைக்க வேண்டும். பின்னர் மாலை, பூ அணிவித்து துர்க்கை அன்னை முன் பூ, பழம், பொறி ஆகியவற்றைக் கொண்டு படையலிட்டு வழிபாடு நடத்த வேண்டும்


மேலும் படிக்க | ASTRO Traits: காதல் துணையை உண்மையாக நேசிக்கும் ‘5’ ராசிகள்..


திருஷ்டி கழிக்கும் முறை


வெள்ளை பூசணிக்காய் மீது மஞ்சள் பூச வேண்டும். மேலும் சிறிய பகுதியை அறுத்து எடுத்து, அந்த இடத்தில் சிவப்பு முழுமையாக செலுத்தி பின்னர் பூசணிக்காயின் அறுத்தெடுத்த பகுதியை அதே இடத்தில் பொருத்த வேண்டும். பூஜையை நிறைவு செய்த பிறகு, ஏற்கனவே அறுத்து வைத்திருக்கும் எலுமிச்சையில் திருஷ்டி கழித்த பிறகு, பூசணிக்காயை உடைக்க வேண்டும்.  பூசணிக்குள் சில நாணயங்களையும் வைப்பது வழக்கம். 


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி 2022: சனி மகாதசையில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ