Zodiacs & Love Marriage Yogam: காதல் உணர்வு என்பது மகத்தானது. அதை அனுபவிப்பவர்களுக்குத்தான், அதன் மாயாஜால சக்தியை உணர முடியும். கண்ணின் கடை பார்வையை காதலியர் காட்டிவிட்டால், மண்ணின் மைந்தர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் இன்று பாரதிதாசன் கூறியுள்ளதை போல, காதலர்களுக்கு பெரிய மலை கூட கடுகாக தெரியும். அதை எளிதாக தூக்கி விடுவார்கள்.ஜோதிடத்தில் குண நலன்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. அதில் சில ராசிகளுக்கு காதல் திருமண யோகம் நிச்சயம் உண்டு என்றும், அவர்கள் நிச்சயம் காதல் திருமணம் தான் புரிவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷ ராசி 


மேஷ ராசிக்காரர்கள் நிச்சயம் காதல் திருமணம் தான் செய்வார்கள் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. மிகவும் உணர்ச்சி வசப்படும் தன்மை கொண்ட இவர்கள், தங்கள் வாழ்க்கை துணைக்கு மிகவும் விசுவாசமாக இருப்பார்களாம். இவர்கள் எதிலும் விரைந்து முடிவெடுக்கும் வல்லமை பெற்றவர்கள். காதல் விஷயத்திலும் இதே கதை தான். தனக்கு பிடித்த நபரை பார்த்த உடனேயே காதலிக்க முடிவு செய்துவிடுவார். இவர்கள் கண்டதும் காதல் வகையினரை சேர்ந்தவர்கள். காதல் மட்டுமல்ல இவர்களது திருமண வாழ்க்கையும் வெற்றிகரமாகவே இருக்கும். ஏனென்றால் தனது வாழ்க்கை துணையை இவர்கள் மிகுந்த அக்கறையுடன் பார்த்து பார்த்து கவனித்துக் கொள்வார்கள்.


ரிஷப ராசி


ரிஷப ராசியினருக்கு காதல் திருமணம் செய்யவே விருப்பம். பார்த்து பழகி பேசி, நன்றாக புரிந்து கொண்ட பிறகே திருமணம் செய்ய வேண்டும் என்று இவர்கள் விரும்புகின்றனர். கொஞ்சம் பிடிவாத குணமும், குணமும் இருந்தாலும், இவர்கள் துணையை சந்தோஷமாகவே வைத்துக் கொள்வார்கள். மேலும், தனது வாழ்க்கை துணைக்கு தனது வாழ்க்கை பற்றிய அனைத்து விஷயங்களும் அறிந்திருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இதனால் வருங்காலத்தில் பிரச்சினை ஏதும் இருக்கக் கூடாது என்று அனைத்தையும் தனது துணையிடம் வெளிப்படையாக பேசும் தன்மை இவர்களிடம் இருக்கும். இதனாலேயே இவர்களின் திருமண வாழ்வும், மகிழ்ச்சியாகவே இருக்கும்.


மேலும் படிக்க | முக்கிய மாற்றம் காணும் சனி, குரு: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வாழ்க்கை பிரகாசிக்கும்


மிதுன ராசி


 மிதுன ராசிக்காரர்கள் இயல்பிலேயே ஒரு சுமூகமாக பழகக்கூடிய தன்மை கொண்டவர்கள். அனைவரையும் அனுசரித்து செல்லும் பழக்கம் இவர்களிடம் இருக்கும். அனைவரின் நம்பிக்கைக்கும் பாத்திரமானவர்களாக இருப்பார்கள். தனது வாழ்க்கை துணையிடவும் மிகுந்த விசுவாசத்துடன் இருப்பார்கள். இவர்களது நம்பகத் தன்மை காரணமாக, பெண்கள் இவர்கள் பால் ஈர்க்கப்பட்டு, திருமணம் செய்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு காதல் திருமணம் யோகம் கட்டாயம் உண்டு.


தனுசு ராசி


தனுசு ராசிக்காரர்களைப் பொறுத்தவரை, கொஞ்சம் பிடிவாத குணம் கொண்டவர்கள். தங்கள் விருப்பப்படி வாழ நினைப்பார்கள். அந்த வகையில் இவர்களும் காதல் திருமணத்தையே விரும்புவார்கள். எந்த என்ன தடைகள் வந்தாலும், காதலித்த பெண்ணை கைப்பிடிக்க வேண்டும் என்ற உறுதி இவர்களிடம் இருக்கும். தன்னை நம்பி வந்த பெண்ணை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும். குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்.


பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | 75 ஆண்டுக்கு பின் சுக்கிரன், சனி, செவ்வாய் சேர்க்கை.. இந்த ராசிகளுக்கு பண வரவு, பொற்காலம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ